பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172. மைக்கேல் காலின்ஸ் பொதுஜனங்களிடம் சிறிதாவது அபிமானமுள்ள போலீஸாரை ராஜிநாமாச் செய்யும்படி தூண்டுவதற்குத் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தூண்டுதல்களும், வேண்டுகோள்களும், ஜனங்களுடைய சமூக பகிஷ்காரம் என்னும் ஆயுதமும் போலீஸாருடைய மனத்தைக் கலைத் தன. அநேகம் போலிஸார், தங்களுக்கும் ஜனங்களுக் கும் எவ்விதப் பகையும் இல்லை என்பதை அறிந்து: வேலையை ராஜிநாமாச் செய்தனர். வேலையை விடுவோர் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. பயம் காரணமாகச் சிலர் வேலையிலிருந்து நீங்கியது உண் மையேயாயினும், தேசத்திற்கு எதிராக மாற்ருருடன் சேர்ந்துகொண்டு தம் சுயதேசத்தாரை வதைக்க மன மின்றியே பெரும்பாலோர் விலகினர். ஜீவனத்திற்கு உபாயமாக அவர்கள் வைத்துக்கொண்டிருந்த பதவிகளே விட்டது பெருந் தியாகமே யாகும். காலின்ஸ் தனக்கு உதவியாயிருந்த சில போலிஸாரை மட்டும் வேலையை விடாமலிருக்கும்படி செய்துகொண்டான். கடைசிவரை இவர்கள் அவனுக்கு உறுதுணையாக கின்றர்கள். போலிஸாரைப் பின்பற்றிப் பல மாஜிஸ்திரேட்டுகளும் வேலைகளே உதறித் தள்ளினர். அவர்கள் எல்லோரும் இதுவரை ஆங்கில ஆட்சியை ஆதரித்து வந்தவர்கள். செத்த மாட்டை உண்ணிகள் விடுவதுபோலவும், கடலில் மூழ்கும் கப்பலிலிருந்து எலிகள் தப்பி ஒடுவதுபோலவும், அவர்களும் அரசாங்க உத்தியோகங்களே விட்டு வெளி யேறினர். ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்களில் வடகிழக்கு அல்ஸ்ட்டரைத் தவிர மற்ற இடங்களிலெல்லாம் ஸின் பினர்களே வெற்றி பெற்றனர். புதிதாய்த் தேர்ந்தெடுக்