பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கறுப்புக் கபிலர்' 175 புதிதாக அயர்லாந்துக்கு வந்திருந்த இந்தப் படை யினருக்குக் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் போதிய உடைகள் இல்லை. எனவே, அவர்கள் பழைய போலி ஸ்ாரின் உடைகள் சிலவற்றையும் புதிய உடைகள் சில வற்றையும் அணியவேண்டி யிருந்தது. சிலர் கபில நிற முள்ள (காக்கி) அங்கிகளேயும் கறுப்புக் குல்லாக்களேயும், வேறு சிலர் கறுப்பு அங்கிகளேயும் காக்கி நிறக் குல்லாக் களேயும் அணிந்துகொண்டார்கள். அயர்லாந்தின் ஒர் பாகத்தில் கறுப்பும் கபிலமும் கலந்த நிறத்தில் ஒருவகை நாய்கள் உண்டு. அவற்றின் ஞாபகார்த்தமாக, புதிதாக வந்திறங்கிய அந்த விர திரப் படையினருக்குக் கறுப்புக் கபிலர் ' என்ற புனேபெயரை ஜனங்கள் சூட்டிவைத்தார் கள். கறுப்புக் கபிலர் அநேக கொலைகளேயும் கொள்ளே களேயும் கூசாது செய்ததால், அவர்களுடைய பெயரே எங்கும் பீதியை உண்டாக்கியது. அதைக் கண்டு அவர்கள் பெருமிதங்கொண்டு, கறுப்புக் கபிலர் ' என்ற திருநாமத்தைத் தாங்களே விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டனர். இயற்கையிலேயே கொடுமையில் பண்பட்ட அவர் களே மேன்மேலும் கொடுமை செய்யும்படி தூண்டுவதற் காக அரசாங்கம் வார சாரம் ’* என்ற ஒரு பத்திரி கையை நடத்திவந்தது. அதில் அவர்கள் செய்த கொலைகளேயும் அதிக்கிரமங்களேயும் ஆதரித்துக் கட் டுரைகள் பல எழுதப்பட்டன. அப்பத்திரிகை அவர் களேக் கொலைச் செயலுக்குத் துாண்டுவதற்காக வெளி யிட்ட வசனங்கள் சிலவற்றைக் கவனிப்போம்:

  • 'அயர்லாந்தைச் சட்டத்திற்கு அடங்கி நடக்கும் பிரஜை

களுக்கு ஏற்றதாயும், கிளர்ச்சியே தொழிலாய், கொலேயே . The Weekly Summary.