பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

13

உயிர் துறந்தார். இந்தத் தேசபக்த வீரசிகாமணி ஏழை ஜனங்களைப் பற்றி, 'அளவில் பெரியராய், கௌரவத்தில் சிறந்தவராய், சொத்துப் பற்றற்றவராய் விளங்கும் மகாஜனங்கள்’ என்று குறிப்பிடுவாராம். இன்றைக்கும் இந்த வாக்கியம் ஐரிஷ் மக்களிடையே வழங்கிவருகிறது.

பிரிட்டிஷ் அரசாங்கத்தார், தக்க சமயம் கிடைத்தது என்று, டப்ளின் பார்லிமென்டு அங்கத்தினர்களுக்குப் பட்டங்கள், லஞ்சங்கள், பதவிகள், நிலங்கள் முதலியவை கொடுத்து அவர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு, அந்தப் பார்லிமென்டுக்கே சாவு மணி அடித்துவிட்டனர். அயர்லாந்தைப் பிரிட்டனோடு சேர்த்து. ஒரே அரசாங்கத்தின் கீழ் இருக்கும்படி செய்துவிட்டனர். இது 1801-ம் ௵ நடந்தது. இது முதல் அயர்லாந்து பிரிட்டிஷ் தீவுகளில் ஒரு தீவு என்றாகிவிட்டது. பிரிட்டிஷ் பார்லிமென்டே அயர்லாந்துக்கும் பார்லிமென்டாயிற்று. பிரிட்டிஷ் கொடியில் அயர்லாந்தின் சின்னமும் சேர்க்கப்பெற்று 'யூனியன் ஜாக்' என்ற பொதுக் கொடி இரண்டு நாடுகளிலும் பறக்க ஆரம்பித்தது. இந்த யூனியன் ஜாக்கைப் பற்றித்தான் பிற்காலத்தில் எட்வர்டு: கார்ப்பென்டர் என்ற ஆங்கில ஞானி,

'கொடியே! நீ சென்ற இடமெல்லாம்
பஞ்சமும் உன்னைத் தொடர்ந்து வருகுதே!’

என்று பாடினர்.

'யூனியன் ஜாக்'கையும், இங்கிலாந்தோடு அயர்லாந்து 'யூனிய' னாகச் சேர்க்கப்பட்டதையும் எதிர்ப்பதற்காக டேனியல் ஒ'கானல் (1775-1847) என்ற தலைவர் கிளம்பி வந்தார். 1807—முதல் அவரே ஐரிஷ் மக்களின் அரும்பெருந் தலைவராக விளங்கினார். அவருடைய அறிவு, திறமை, ஊழியங்களைக் கவனித்தால், அவரை நமது லோகமான்ய திலகருக்கு ஒப்பிடலாம் என்று தோன்றுகிறது. 'கத்தோலிக் சங்கம்' என்ற சாதாரணமான ஒரு சங்கத்தின் மூலமாகவே அவர் தொண்டாற்றினர். வல்லவர் கையில் புல்லும் ஆயுதமாவது போல், அச்சங்கம் அவர் கருதிய காரியங்களை நிறைவேற்றி வந்தது. அவர் மிகுந்த ஆற்றலுடையவர், சட்ட துணுக்கங்கள் தெரிந்தவர், கட்டுப்பாடும் தன்னம்பிக்கையும் உடையவர், பிரசங்க மாரி என்றால் மாரியாகவே பொழியக்கடடிய வாக்குவன்மை உள்ளவர், எல்லாவற்றிற்கும் மேலாகச் சிறந்த ராஜதந்திரி. அவரைப் போன்ற கிளர்ச்சிக்காரர்