பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கறுப்புக் கபிலர் ” 181 அயர்லாந்திலுள்ள போலீஸ்-க்குள்ளும் ஒரு பெருங் குழப்பம் தோன்றியது. அதல்ை சர்க்காரும் நடுக்க மடைந்தது. கலனல் ஸ்மித் என்னும் போலீஸ் கமிஷ னர் லிஸ்டெளல் படைவீடுகளில் இருந்த போலீஸாருக்கு ஒர் உபதேசம் செய்ய முற்பட்டார். அரசாங்கத்தின் புதிய கொள்கைப்படி கலகக்காரரான ஸின் பினர்களே அடக்க வேண்டும் என்றும், போலீஸார் அவர்களேக்கண்ட இடத் திலேயே சுடவேண்டும் என்றும் பிரசங்கித்தார். நீங்கள் எவ்வளவு அதிகமாகச் சுடுகிறீர்களோ அவ்வளவு அதிக மாக நாங்கள் உங்களே விரும்புவோம் ' என்பது அவ ருடைய திருமொழி. o படைவீடுகளில் இருந்தவர் யாவரும் ஐரிஷ்காரர். அவர்கள் உடனே வெகுண்டெழுந்து கலகம் செய்தனர். கமிஷனர் ஸ்மித் கொலைகாரன் என்று கிந்தித்து, ஐரிஷ் போலீஸ்காரரின் தலைவன் ஒருவன் கண்டித்துப் பேசி ன்ை. ஸ்மித் உடனே அவனேக் கைதி செய்யும்படி உத் தரவிட்டார். போலீஸார், முடியாது ' என்று மறுத்த னர். தாம் மேலும் அங்கு கின்ருல் அபாயம் என்று கருதி, ஸ்மித் விரைந்து ஒடிவிட்டார். பின்னர், போலி: ஸார் வெகு காலத்திற்கு அரசாங்கத்திற்கு அடங்காமலே இருந்தனர். அரசாங்கமும் அவர்களிடம் நெருங்கு வதற்கு அஞ்சியது. ஏனெனில், அவர்களே அடக்கிளுல் மற்ற போலீஸாரிடையிலும் அதிருப்தி உண்டாகிவிடும். அவர்களுடைய ராஜத்துரோகம் கெர்ரி முதலிய இடங்க்ளி லிருந்த படைவீடுகளுக்கும் பரவியது. அரசாங்கம் எதிர்பார்த்தபடி பழைய போலீஸார் ஈவிரக்கமில்லாமல் கொடுமை செய்ய லாயக்கற்றவர்கள்ாய்க் காணப்பட்ட னர். எனவே, அது தன் கறுப்புக் கபிலரைய்ே நம்பி வாழவேண்டி யிருந்தது.