பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 மைக்கேல் காலின்ஸ் லிஸ்டெளல் போலீஸின் கலகத்தைப்பற்றி முதலாவ தாக வெளியிட்டது ஐரிஷ் புல்லெடின்' என்ற டெயில் ஐரானின் தினசரிப் பத்திரிகையாகும். அதிலிருந்து மற்ற பத்திரிகைகளும் அச்செய்தியை வெளியிட்டன. காமன்ஸ் சபையிலும் அதைப்பற்றிய பிரஸ்தாபம் எழுங். தது. இவ்வாறு ஸ்மித்தினுடைய நடத்தை எங்கும் வெளியானதால், இரண்டு தொண்டர்கள் கார்க் நகரில் அவர் இருந்த இடத்திற்குச் சென்றனர். அவர்களில் ஒருவன் அவர் அருகில் சென்று, மிகுந்த நிதானத்துடன், 'கண்ட இடத்திலேயே சுடவேண்டும் என்பதுதானே உமது உத்தரவு : நீர்தான் இப்பொழுது கண்முன்பு இருக் கிறீர். ஆதலால் தயாராயிரும் !' என்று கூறி, உடனேயே சுட்டுத்தள்ளிவிட்டான். புதிதாக வரவழைக்கப்பட்ட ஆங்கில ஒற்றர்கள் டப்ளின் நகர் முழுதும் நிறைந்திருந்தனர். அவர்க ளுடைய பேச்சிலிருந்தே அவர்கள் ஆங்கிலேயர் என்று கண்டுபிடிப்பது எளிதாக இருந்தது. அவர்களுக்கு ஐரிஷ் மக்களிடையே பழகி விஷயங்களே அறிய முடி யாததால், அவர்கள் சந்திகளில் Թոպա பிச்சைக் காரரையும், கேடிகளேயும், போக்கிரிகளேயும் பிடித்து, கூலி கொடுத்து, அவர்களேக் கொண்டு லிென்பினர்களைப் பற்றிப் புலம் விசாரித்து வந்தனர். அந்தத் தரித்திரர் களால் ஒரு வேலையும் செய்ய முடியவில்லை. அவர்கள் தாழ்ந்த கிலேயிலிருந்ததால், ஒருவருடனும் நெருங்கிப் பழக முடியவில்லை. சந்தேகிக்கப்பட்ட முக்கியமான கபர்களே அவர்கள் கண்டுவிட்டாலும், ஒற்றர்களிடத்தில் மறைவாகப் போய் அறிவிப்பதற்கு முன்னல் காணப். பட்ட நபர்கள் மறைந்துபோய் விடுவார்கள். மேலும்