பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

முன்னுரை

உலகத்திலேயே தோன்றியதில்லை என்று ஐரிஷ் ஆசிரியர் ஒருவர் கடறுகிறார் பல வருஷ உழைப்பினல், கத்தோலிக்கரை நசுக்கி வந்த சட்டங்கள் ரத்தாகும்படி அவர் செய்து வைத்தார். பிரிட்டிஷ் பார்லிமென்டுக்கு உள்ளேயும், வெளியே தேசத்திலும், அல்லும் பகலும் பிரசாரம் செய்து, அயர்லாந்தை இங்கிலாந்தோடு பிணித்த யூனியன் முடிச்சை அறுத்துவிட வேண்டும் என்று அவர் மிகவும் முயன்றார். அக்காலத்தில் அயர்லாந்தில் நீடித்த பஞ்சம் தோன்றியதால், லட்சக்கணக்கான ஜனங்கள் மடியவும், லட்சக்கணக்கானவர் நாட்டை விட்டு வெளியேறவும் நேர்ந்தது. ஒ'கானல் தமது மரணம் வரை ஜனங்களுக்காகவே உழைத்து, அவர்களுக்கு வீரமும் நம்பிக்கையும் உண்டாகுமாறு செய்து வந்தார். அவருடைய லட்சியம் முழுதும் உடனே கைகூடவில்லை என்றலும், அந்த லட்சியத்தை விரைவில் அடையக்கூடிய வல்லமை ஜனங்களுக்கு ஏற்பட்டுவிட்டது என்பதுதான் அவருடைய பெருமை, மேலும் மக்கள், தங்களுடைய அபார சக்தியை அறிந்துகொண்டு விட்டனர். 'எவர்களோ, எங்கிருந்தோ ஆட்சி செய்ய வேண்டியதில்லை, நாமே நம் யஜமானர்கள்' என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.

ஒ'கானலுடன் உழைத்து வந்த தாமஸ் டேவிஸ், ஜான் மிச்செல் போன்ற தலைவர்கள் 'வாலிப அயர்லாந்து இயக்கம்' என்ற அதிதீவிர தேசிய இயக்கத்தை ஆரம்பித்தார்கள். பஞ்சத்தால் துடித்துக்கொண்டிருந்த அயர்லாந்திலிருந்து அரசாங்கம் ஏராளமான கோதுமையை இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தது. (1848-ல்) இதை எதிர்த்துக் கலகம் செய்ததற்காக, வாலிப அயர்லாந்து இயக்கத்தினர் பலரை அரசாங்கம் கைதி செய்து, நாடு கடத்தி, இயக்கத்தையே நசுக்க முயன்றது. ஆனால், தேசீய இயக்கம் உண்மையாக வேரூன்றிய பின் அடியோடு அழிந்துவிடுமா? வெகு சீக்கிரத்தில் 'பீனியன் சங்க'மும், 'ஐரிஷ் குடியரசுச் சகோதரத்துவ சங்க' மும் தோன்றிவிட்டன. பின்னால் ஆர்தர் கிரிபித்தின் தலைமையில் தோன்றிய 'ஸின்பீன்' இயக்கத்திற்கு இவையே உரமும் நீருமாய் விளங்கின.

சீமையிலுள்ள பார்விமென்டில் அயர்லாந்தின் பிரதிநிதிகளாக இருந்து அரிய தொண்டாற்றிய தலைவர்களில் தலைசிறந்தவர் பார்னல் (1846-1891). பொருளாதாரத் துறையிலும், அரசியல் அந்தஸ்திலும் அவரால் அயர்லாந்து மிகுந்த லாபம் அடைந்தது. அவர் மரணமடையு முன்பே அயர்லாந்து வெகு சீக்கிரத்தில் சுதந்திரம் அடைந்தேதீரும் என்ற நிலை ஏற்பட்டிருந்தது. நாட்டில்