பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 மைக்கேல் காலின்ஸ் 1920-ம்u முடிவதற்குள் வலின் பீன் இயக்கத்தை நசுக்கி விடவேண்டும் என்பதுதான். -- தேசத்திலிருந்த போலீஸார், நாளுக்கு நாள் வலிமை விழந்து, தங்களையும் தங்கள் படை வீடுகளையுமே காக் துக்கொள்ள முடியாது தவித்தனர். நாட்டுப் புறங்களில் தனித்திருந்த படைவீடுகள் தொண்டர்களால் தாக்கப் பட்டன. கொஞ்சங் கொஞ்சமாகப் போலிஸார் யாவரும் சில நகரங்களில் மட்டும் கூட்டமாகச் சேர்த்து வைக்கப் பட்டனர். பல படைவீடுகள் காலிசெய்யப்பட்டன. தொண்டர்கள் உடனே காலியான படைவீடுகளத்திக் கிரையாக்கினர். போலிஸாருடைய பலக் குறைவைப் பற்றி இன்ஸ்பெக்ட்ர்களும். கமிஷனர்களும் மேலதி காரிக்கு எழுதிய கடிதங்கள் சில காலின்ஸின் கைக்குக் கிடைத்தன. இன்ஸ்பெக்டர் ஒருவர் எழுதிய கடிதம் இ.அ. . - - == ராஜிநாமாக்களிலுைம் விலகிக்கொள்வதலுைம் நாம் . ஒவ்வொரு நாளும் ஆட்களை இழந்துகொண்டே வருகி ருேம். புது ஆட்கள் சிலரைக்கட்டச் சேர்க்கவும் முடிய வில்லை... ஸ்டேஷன்களைக் காலிசெய்வது வருந்தத்தக்க పోవ யமாயினும், அதைத் தவிர வேறு வழியில்லை...தற்சமயம் நாம் எங்கும் பலiன்மாயும் காப்பில்லாமலும் o அபாய நிலையில் இருக்கிறுேம். போலீஸார் தங்கள் எல்லைகளில் ஆகிக்கமில்லாமல் படைவீடுகளில் தங்கியிருப்பதில் ஒரு பயனுமில்லை. ’ மேஜர் பின்னி என்னும் இன்ஸ்பெக்டர் தமது ஆகஸ்டு மாத அந்தரங்க அறிக்கையில் குறிப்பிட்டதாவது: -- தேசத்தின் நிலைமையில் எவ்விதச் சீர்திருத்தமுமில்லை ; , ஆல்ை சீர்குலைவுதான் ஏற்பட்டிருக்கிறது......எல்லா இடங்.