பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 மைக்கேல் காலின்ஸ் ஜூலை மாதம் 28-ம் தேதி குறிப்பிடத் தகுந்த ஒரு செய்தி வெளியாயிற்று. சிப்பாய்களேயும் ஆயுதங்களேயும் ரயில்களில் ஏற்றிச்செல்ல முடியாது என்று கூறிய ஐரிஷ் ரயில்வேக்காரர். 200 பேர் வேலையிலிருந்து நீக்கப் பட்ட விஷயம் வெளியாகி எங்கும் பரபரப்பை உண்டாக் கியது. - கால்வேயிலும் மேற்கு அயர்லாந்திலும் அதிகாரிகள் பயங்கர ஆட்சியைத் தொடங்கினர். அப் பகுதிகளி லுள்ள வாலிபர்களேச் சிப்பாய்கள் இரவு நேரங்களில் அவர்கள் வீடுகளிலிருந்து வெளியே கொண்டு போய், ஆடைகளைக் கழற்றி அடிப்பதும், அதுன்பு அறுத்துவதும் சகஜமா யிருந்தன. 24 மணி நேரத்தில் ஜில்லாவை விட்டு வெளியேறும்படி பலருக்கு உத்தரவுகள் போடப் பட்டன. உடனே வெளியேருதவர்கள் சுடப்பட்டனர். மேற்குப் பகுதியில்தான் கறுப்புக் கபிலருடைய அட்ட காசங்கள் உச்ச ஸ்தானத்தில் இருந்தன. அப்பகுதி சுதந்திரப் போராட்டத்தில் அதிகமாய்க் கலந்து கொள் ளாததாகும். கால்வேயிலிருந்த மைக்கேல் கிரிபின் என்ற பாதிரியார் பெரிய தேசாபிமானியாயும், ஐரிஷ் பாஷையை வளர்ப் பதில் ஆர்வங். கொண்டவராயும் இருந்தார். গুচে நாள் அவரைச் சிப்பாய்கள் பிடித்துக்கொண்டு போயினர். பின்னுல் நவம்பர் மாதம் 21-ம் தேதி அவருடைய பிரேதம் ஒரு சதுப்பு கிலத்தில் காணப்பட்டது. அவர் தலையில் குண்டு பாய்ந்திருந்தது. சிப்பாய்களுக்குத் தலைவரா யிருந்த ஜெனரல் குரோஸியர் பிற்காலத்தில் தாம் எழுதிய புத்தகம் ஒன்றில், கிரிபின் பாதிரியார் அவருடைய படுக்கையிலிருந்து வெளியே இழுக்கப் பட்டு என்னுடைய ஆட்களாலே கொலை செய்யப்பட்