பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எறுப்புக் கபிலர் 101 - டார் ! என்று எழுதியிருக்கினர். கிரிபினேப் போலவே, மாக்னர் என்னும் மதபோதகரும் கார்க் தாலுகாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். டெரென்ஸ் மாக்ஸ்வினி மக்கர்டெயின் கொலேயுண. பிறகு கார்க் நகர மேயர் பதவியை ஏற்றுக்கொண்ட விஷயம் முன்னர் கூறப்பட்டிருக்கிறது. அவரைக் கைதி செய்து ராணுவக் கோர்ட்டில் தண்டனை விதிக்க அரசாங்கம் ஏற்பாடு செய்தது கோர்ட்டிலேயே. நீங்கள் விதிக்கும் தண்டனைக் காலம் முழுதும் நான் சிறையில் இருக்கப் போவதில்லை ! என்று மாக்ஸ்வினி கர்ஜித் தார். அவர் நாடுகடத்தப்பட்டு, இங்கிலாந்திலுள்ள பிரிக்ஸ்டன் 2 றயில் வைக்கப்பட்டார். அங்கு தம்மை விடுதலை செய்யும்வரை உணவு உண்பதில்லை என்று அவர் விரதம் மேற்கொண்டார். ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளில் அவருடைய கிலேமையைக் குறித்து வெளிவந்த செய்திகளே ஜனங்கள் ஆவலுடன் படித்து வந்தனர். நாள் செல்லச் செல்ல, அவருடைய உண்ணு விரதம் மக்களிடையே பெருங் கவலையையும் வருத்தத் தையும் விளேவித்தது. மாக்ஸ்வினி குன்ருத விரத் துடன் பட்டினித் தவத்தைத் தொடர்ந்து மேற்கொண் டிருந்தார். உலகத்தின் பல பாகங்களில் அவருடைய விரதம் ஆச்சரியத்தையும் அதுதாபத்தையும் உண்டாக் கியது. 74-தினங்கள் அன்னகாரமின்றி, அங்குலம் அங் குலமாக உடலும் உணர்வும் தேய்ந்து, அவர் விண் ணுலகை அடைந்தார். இச்செய்தியைக் கேட்ட ஐரிஷ் மக்கள் இடியுண்ட காகம்போல் பதைத்தனர். உலக மக்களும் ஓர் பெரும் தேசபக்தரின் உயிரைப் பழி வாங்குவதற்கு ஆங்கில அரசாங்கம் செய்து வந்த