பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 மைக்கேல் காலின்ஸ் பிடிவாதத்தின் கொடுமையை வெறுத்தனர். விடுதலே வேண்டி உண்ணு விரதம் இருப்பது சரியோ தவருே என்பது ஒருபுறம் இருக்க, மாக்ஸ்வினியின் ஆத்ம பலி தானம் ஸின் பீன் கட்சிக்கு எங்கணும் மிகுந்த ஆதரவை உண்டாக்கியது. ஆல்ை, அவர் மரணத்தால், மகாவீரன யும், அறிவாளியாயும், பணி செய்வதையே கடகைக் கொண்ட தொண்டர் திலகமாயும் விளங்கிய ஒரு குமர னேத் தேசம் இழந்துவிட்டது. ஸின்பீன் இயக்கமும் தன்னைத் தாங்கி நின்ற துாண்களில் ஒன்றை இழந்து விட்டது. * டப்ளினில் ஒற்றர் வெள்ளம் கரை புரண்டு ஒடிற் று. நோக்கிய திசை யெல்லாம் ஆங்கில ஒற்றர்கள் குழுமி கின்றனர். முக்கியமான உளவு அதிகாரிகள் பலர் சாதாரணக் குடி ஜனங்களேப் போல நகரின் பல பாகங் களில் விடுகள் அமர்த்திக்கொண்டு வாழ்ந்துவந்தனர். உளவறிதலும், தொண்டர்களேயும் சந்தேகப்பட்டவர் களேயும் எங்கே கண்டாலும் சுட்டுத்தள்ளுவதுமாகிய இருவிதக் கடமைகளே அவர்கள் செய்துவந்தார்கள். அவர்கள் கொலை செய்வதற்கென்றே பல கூட்டங்கள்ாக, அமைக்கப்பட்டிருந்தனர். கில்மல்லக் நகரில் மிகவும் பிரசித்தமான ஜான் லிஞ்ச் என்பார், செப்டம்பர்மீ. 22-ம்வட, தேசியக் கடனுக்குச் சேர்ந்த 28,000 பவுனே எடுத்துக்கொண்டு டப்ளி னுக்கு வந்தார். அத்தொகையைக் காலின்ஸினிடம் செலுத்திய பிறகு, அவர் ஒரு நாடகசாலையில் கொஞ்ச நேரத்தைக் கழித்துவிட்டு, தம்முடைய ஜாகையான * எக்ஸ்சேஞ்ச் விடுதிக்குச் சென்று படுத்துறங்கினர். அன்றிரவு 2-மணிக்கு ஆங்கில அதிகாரிகள் சிலரும்,