பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழிக்குப் பழி 203. சிரித்துக்கொண்டே நல்ல பேர்வழியாய்க் காண்கின் ருய் !" என்று சொல்லி, விட்டுவிடுவது வழக்கம். தன்னப் பிடிப்பதற்காக இங்கிலாந்திலிருந்து எத் தகைய மனிதர்கள் அனுப்பப்படுகிருர்கள் என்பதைக் காலின்ஸ் நன்ருய்த் தெரிந்துகொண்டிருந்தான். அவர் களில் முக்கியமானவன் ஒருவன். அவனுக்கு ஹார்ட்டி, கூடிங், ஹார்லிங், ஸ்வில்லி என நான்கு பெயர்கள் உண்டு. எத்தனையோ கள்ளக் கையெழுத்திட்டு மோசடிகள் செய்து அவன் பன்முறை சிறை சென்றவன். ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி அவன், தான் அயர்லாந்தில் ஒற்ற கை வேலை செய்வதாயும், ஸின்பினர்கள் ஆயுதங்கள் வைத்திருந்த இடங்கள் தனக்குத் தெரியும் என்றும் லார்டு பிரெஞ்சுக்கு ஒரு கடிதம் எழுதினன். கடிதத்தில் கூடிங் என்று கையொப்ப மிட்டிருந்தான். இப் ப்ெயரால் தான் அவன் 1918-ல் 5-u சிறைத் தண்டன் அடைக் திருந்தான். அத்திருடன், சட்டத்தையும் அமைதியையும் பாதுகாக்க, அயர்லாந்துக்கு வரவழைக்கப்பட்டான் ! லார்டு பிரெஞ்சும் அவனே வேலைக்கு அமர்த்திக் கொண்டார் ! அவன் அயர்லாந்துக்கு வந்தது முதல், காலின்ஸ் அவனே மிகவும் எச்சரிக்கையாய்க் கவனித்து வந்தான். அவன் லார்டு பிரெஞ்சுக்கு எழுதிய கடிதங்களே யெல் லாம் காலின்ஸ் வழி மறித்து உடைத்துப் பார்த்தான். அவ்வாறு உடைக்கப்பட்டவற்றில் கூடிங் அதுவரை செய்த மோசடிகள் எல்லாம் எழுதப்பட்டிருந்தன. அம் மோசடிகள் பெல்பாஸ்டில் ஜஸ்டிஸ் கார்டன் என்ற நீதிபதி முன்ல்ை ஒப்புக் கொள்ளப்பட்டவை. பதின்ைகு இடங் களில் கள்ள உண்டியல்களினுலும், போலி விளம்பரங்