204 மைக்கேல் காலின்ஸ் களிலுைம், திருட்டினலும் ஏராளமான பணம் பறித்த தாக அவனே ஒப்புக்கொண் டிருந்தான். அக்குற்றங் களே யெல்லாம் அரசாங்கம் மன்னித்து, அவனே ஒற்ற கைவும் வைத்துக்கொண் டிருந்தது. கூடிங்குக்கு மரண தண்டனே விதித்து விடாமல், தக்க எச்சரிக்கை மட்டும் செய்யவேண்டும் என்று காலின்ஸ் தீர்மானித்தான். அவன் சில நபர்களே. அனுப்பி, கூடிங்கைக் கண்டு பேசும்படி செய்தான். 副 அவர்களிடம் கூடிங் தான் ஆங்கில அதிகாரிகளைக் காட் டிக் கொடுக்கத் தயாரா யிருப்பதாகக் கூறின்ை. அவர் கள் அவனைத் தொண்டர் படையின் முக்கியமான கூட் டத்திற்கு அழைத்துச் செல்வதாக வாக்களித்து, ஒரு குறிப்பிட்ட நாளில் அழைத்துக் கொண்டு வந்தனர். கூடிங் அழைத்துவரப்பட்ட இடத்தில் அயர்லாந்து இங்கிலாந்து முதலிய பல காட்டுப் பத்திரிகைக்காரர்கள் கூடியிருந்தனர். ஆர்தர் கிரிபித் அவர்களுக்குத் தலைமை வகித்திருந்தார். அக்கூட்டத்தில் இருந்தவர்கள் எவர் கள் என்பதை அறியாது, கூடிங் தான் யோசித்துள்ள சில திட்டங்களே விவரித்தான். அத்திட்டங்களின்படி காலின்ஸைப் பிடிக்கவேண்டும் என்பதே அவன் தீய எண்ணம். எல்லோரும் வெகு நேரம் அமைதியுடன் கேட்டுக்கொண் டிருந்தனர். முடிவில் கிரிபித் அவனுக்கு அங்குள்ளவர்களைப் பற்றி எடுத்துச் சொன்னர். அவன் அதுவரை செய்துள்ள குற்றங்களேயும், அடைந்த தண் டனேகளேயும் அவர் விவரித்துக் கூறினர். அவற்றைக் கேட்டவுடன், கூடிங் இடியுண்ட நாகம்போல் தளர்ந்து வீழ்ந்தான். ஒருவருக்கும் தெரியாது என்று அவன் கருதிய விஷயங்கள் எப்படியோ வெளியாகி யிருந்தன !
பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/208
தோற்றம்