பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழிக்குப் பழி 2O7 வன். காலின்ஸ் கடைசியாகவே சென்ருன். அவன் வெளி யேறும்பொழுதே கறுப்புக் கபிலர் அதிவேகமாக வாகான் விடுதியை நோக்கி லாறிகளில் வந்துகொண்டிருந்தனர். அவன், மின்னல் பாய்வதுபோல், பார்னல் சதுக்கத்தி லுள்ள ஒரு விட்டுக்குள் புகுந்துவிட்டான். அவ்விட்டின் மாடியிலிருந்துகொண்டு, அவன் பட்டாளத்தாரின் திரு விளேயாடல்களேக் கவனித்தான். விடுதியில் ஒகானல், பீஸ்லேய் என்னும் இருவர் குளுன் என்னும் ஒரு சிறுவனிடம் பேசிக்கொண்டிருந்தனர். பட்டாளத்தார் காலின்ஸ்-சம் அவன் தோழர்களும் அங் கிருந்ததாகத் தகவல் கிடைத்தே விரைந்து வந்திருந்த னர். அவர்கள் விடுதியில் சாப்பிட்டுக்கொண் டிருந்த வர்களேயும் மற்றவர்களேயும் பல கேள்விகள் கேட்டனர். அங்கு நேர்ந்த குழப்பத்தின் நடுவே, பீஸ்லேய் பின்வாசல் வழியாகத் தப்பின்ை. பின்பக்கம் தோட்டத்திற்கு வெளியே போக வழியில்லாததால், அவன் ஒரு சுவரில் i. ஏறி, அடுத்த விட்டுத் தோட்டத்தில் குதித்து மறைந்து கொண்டான். nன் ஒகானலும் பல சுவர்களேத் தாண்டி வெளியே செல்லுகையில், அங்கு கிறுத்தப்பட்டிருந்த பட்டாளத்தார் அவனேப் பிடித்துக்கொண்டனர். அவன் எதிர்ப்புறத்தில் ஒரு முடுக்கிலே தன் வீடு இருப்பதாயும், தான் அங்கு செல்வதற்காகவே வந்ததாயும்,சமயோசிதம் போல் கூறினன். பட்டாளத்தாரும் அவனே நம்பி விட்டு விட்டனர். குளுன் என்னும் சிறுவன் மட்டும் விடுதியில் சிப் பாய்கள் கையில் சிக்கினன். அவர்கள் அவனே டப்ளின் மாளிகைக்குக் கொண்டு சென்றனர். குளுன் பின்னல் மீளவேயில்லை ; அவர்கள் குண்டுக்கு இரையானன்.