பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I ழிக்குப் பழி 21-T போல் அடக்கி விடுவதாக அவரிடம் உறுதி கூறிய ராணுவ அதிகாரிகளின் எண்ணம் கிச்சயமாய்ப் பலிக் காது என்பது அதல்ை புலயிைற்று. மிகப் பயங்கரமான ஆட்சிக்குப் பின்னும் தொண்டர் படை உடையவில்லை. அதற்கு மாருக, அது வல்லரசின் அதிகாரிகள் பலரை எககாலத்தில் குறிவைத்துப் பிடித்து விழுங்கிவிட்டது. லாயிட் ஜார்ஜ் தேர்ந்த ராஜதந்திரி யாதலால், அயர் லாந்துடன் சமாதானத்துக்கு வழி இருக்கிறதா என்று மெதுவாகக் கவனித்து வரலார்ை. ஆல்ை, டப்ளினிலிருந்த அதிகாரிகள் தங்கள் பயங் கர முறைகளே அதிகப்படுத்தினர். இரவு 10-மணியி லிருந்தே கர்பியூ உத்தரவு போடப்பட்டது. கூட்டங் கூட்டமாகப் பலரைக் கைதி செய்ய உத்தரவுகள் பறந் தன. ஸின் பீன் கைதிகளே அடைத்து வைக்க வடக்கே பல்லிகின்லரிலும்,குர்ராக்கிலும் தாற்காலிகச் சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டன. டப்ளினிலும் சுற்றுப் பக்கங்களிலும், தெருத் தெருவாக, வீடு வீடாகச் சோதனைகள் செய்யப் பட்டன. சந்தேகிக்கப்பட்ட ஒவ்வொரு நபரையும் கைதி செய்து புதிய சிறை ஒன்றுக்கு அனுப்பி வைப்பது சகஜமாயிற்று. இத்தனே தடபுடல்களிடையே, போராடக் கூடிய திறமையுள்ள தொண்டர்கள் யாவரும் தப்பித் துக்கொண்டது ஆச்சரியமாகும். அவர்கள் சொந்த விடுகளில் தங்காது வெளியிடங்களிலே எச்சரிக்கை யுடன் சஞ்சரித்து வந்தனர். ஒவ்வொரு நாளும் தெருக் களிலும், வீடுகளிலும் சோதனைகள் நடந்தவண்ணமா யிருந்தன. ஆயினும், இவையெல்லாம் கொண்டர்களைப் பெரிதும் பாதிக்க முடியவில்லை.