பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 மைக்கேல் காலின்ஸ் -Ty ஆர்தர் கிரிபித், டுக்கன், மக்நீல், ஸ்டெயின்ஸ் முதலியோர் கைதி செய்யப்பட்டு, மெளன்ட்ஜாய் சிறையின் வைத்திய சாலையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மரியாதை. யாக கடத்தப்பட்டதுடன், அவர்களுக்கு விசேஷ. உரிமைகளும் அளிக்கப்பட்டன. காலின்ஸ் சிறைக்குள் இருந்த கிரிபித்துடன் இடைவிடாது கடிதப் போக்கு. வரத்து வைத்துக்கொண்டிருந்தான். பல வார்டர்கள் இவ்விஷயத்தில் அவனுக்கு உதவி புரிந்தனர். தொண்டர் படையின் வேலைகளுக்காக இதுவரை உபயோகித்த பார்னல் சதுக்கத்திலுள்ள வீடுகள் LIGU ' அதிகாரிகளால் அடிக்கடி சோதனை செய்யப்பட்டதால், அவற்றில் வேலைசெய்ய வழியில்லை. வாகான் விடுதியும் அவர்கள் கவனத்தில் விழுந்தது. அவர்கள் காலின் ஸைத் தேடி அதை அடிக்கடி சோதித்தனர். காலின்ஸ், மிக அவசியமான வேலை யிருந்தால், அவர்கள் தேடிய பின்னரும, மீண்டும் வருவதற்கு முன்னலும், அங்கு சென்றுவந்தான். சில சமயங்களில் அவன் அங்கு செல்லும்பொழுது சோதனே முடிந்திருக்கும். சில சமயங் களில் அவன் அங்கிருந்து வெளியேறியவுடன் சோதனை நடைபெறும். வாகான் விடுதியின் சொந்தக்காரர் மகயர் என்பவர். அவர் காலின் ஸைப் பிடித்துக் கொடுத்தால் 40,000 பவுன் பரிசளிப்பதாக அரசாங்கம் வாக்களித்தது. பணத்தை விரும்பி, அயர்லாந்தின் தவப் புதல்வனrஅடிமைத்தனத்தை வேரோடு பொசுக்கும் அனலைதொண்டர் திலகத்தை-அவர் காட்டிக்கொடுக்க மறுத் தார். அதிகாரிகள் வாகான் விடுதியில் ೬L-670 P துண்டக்கும் வேலைக்காரனை ஹார்ட்டி என்பவனேக் கைதி செய்தனர். அவனே டப்ளின் மாளிகையில் ஒர்