பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 - மைக்கேல் காலின்ஸ் == ---- -- mu - _ முக்கியமானவர்களேயும் அங்கிய அரசாங்கத்துக்குக் காட்டிக் கொடுப்பவருக்கு எத்தனே ஆயிரம் பவுன்கள் பரிசு கிடைக்கும்:அந்தத்திரவியம் தீவினையால்வருவது, தீண்டத் " - தகாதது, தேசபக்தர்கள் பல்லாயிரவரின் உதிரம் தோய்ந்தது என்று ஐரிஷ் மக்கள் அதை உதறித் தள்ளினர். உண்மையில் மற்றைப் போர் விரரின் உதவியைப் போலவே, காட்டிக்கொடுக்க மறுத்த மகயர், ஹார்ட்டி முதலியோர் உதவியும் அபார மான ஆ. பூட்ஸ்- அடைக்கும் ஹார்ட்டிக்கும். ஆயிரக் . கணக்கான பவுன் துச்சமாகத் தோன்றிவிட்டது ! அக்காலத்தில் காலின்ஸ் பார்னல் தெருவில் லியாம் டெல்வினுடைய விட்டு மாடியையும், கிர்வானுடைய மதுக் கடையையும் தன் வேலைகளுக்கு உபயோகித்துக்கொண்டு வந்தான். கிர்வான் விடுதியில்தான் அவன் மெளன்ட் ஜாயிலிருந்து வரும் வார்டர்களேச் சந்திப்பதும், தொண் டர்களுக்கு ஆயுதங்கள் பிரித்துக்கொடுப்பதும் வழக்கம். மதுக்கடையின் முன்புறத்தில் ஒரு கிராதிக்குப் பின்ன லிருந்து மது வகைகள் விற்கப்படும்; வங்கிக் குடிப்ப வர்கள். முன் க்கம் நிற்பார்கள்.: காலின்ஸ் முன் பக்கத்தில் கின்றுகொண்டு, கொஞ்சம் மதுவ்ை வாங்கிக் கையில் வைத்துக்கொண்டு குடிப்பது போல் பாவனே செய்துகொண்டே தன் போலீஸ் நண்பர்களுடனும், வார்டர்களுடனும் பேசுவது வழக்கம். ஒரு நாள் இரவில் அவன் அவ்வாறு கின் அறு, தனக்கு மிக்க உதவி புரியும் லார்ஜன்டு மாரிஸ் மக்கார்தியுடன் பேசிக் கொண்டிருந் தான். திடீரென்று கறுப்புக் கபிலர்கள் பலர் அங்கு வந்து சோதனைபோடத் தொடங்கினர். முதலில் ஸார் ஜன்டு மக்கார்தின்யச் சோதித்தனர். அவன் போலீஸ்