பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளமைப் பருவம்


யர்லாந்தின் தென்பாகத்தில், ஸாம்ஸ் கிராஸ் என்னுமிடத்தில், ஒரு கிழவரும் குமரியும் கருத்து ஒருமித்து இன்பகரமாக இல்வாழ்க்கை நடத்தி வந்தனர். மற்றையோர் பழுத்து உதிரவேண்டிய வயதில் அக்கிழவர் திடகாத்திரத்துடன் விவசாயம் செய்து வந்தார். அவருக்குக் கொற்று வேலையும் தச்சு வேலையும் மிக நன்றாய்த் தெரியும். அத்துடன் அவர் பெரிய கல்விமான். கிரேக்க பாவஷை, லத்தீன், பிரெஞ்சு முதலிய பாஷைகளில் அவருக்குத் தேர்ச்சியுண்டு. அவருடைய மூளையைப் பல விஷயங்கள் அடங்கிய ஓர் புத்தகசாலை யென்னலாம். வயது முதிர்ந்த பின்னும் அவர் படிப்பை நிறுத்தவில்லை. அவருடைய சொந்த பாஷையாகிய கெயிலிக் பாஷையையும், ஆங்கிலத்தையும் தண்ணீர் குடிப்பதுபோல் தாராளமாய்ப் பேசக்கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு. 'அயர்லாந்து எனது அருமைத் தாய் நாடு. தொன்றுதொட்டு இந்நாட்டை ஆண்டுவந்த—இந்நாட்டுச் சொந்தக்காரராகிய—உண்மையான கெயிலியர் வழிவந்தவன் நான் !' என்று அவர் அடிக்கடி பெருமிதங் கொண்டு பேசுவார்.

உண்மையில் அப் பெருங் கிழவரான மைக்கேல் காலின்ஸ் அயர்லாந்தின் பழம்பெருங் குடிகளின் வழித்தோன்றல். அவருடைய வாழ்க்கைத் துணையாக விளங்கியவள் மேரி ஆன் ஒபிரியன். மேரி தன் இருபதாவது வயதில் அறுபது வயதாயிருந்த காலின்ஸை மணந்து

மை-2