உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 மைக்கேல் காலின்ஸ் லாந்துக்குக் கடத்துவதற்கு கெர் பொறுப்பாளியா யிருந்ததால், திடீரென்று அவன் கைதியானது கஷ்ட் மாக முடிந்தது. ஆயினும், அவன் தன் மனேவி மூலம் தகவல் சொல்லி, வேண்டும் ஏற்பாடு செய்தான். கிறிஸ்துமஸ் பண்டிகைக்குக் கொஞ்சம் முன்னுல், பட்டாளத்தார் வழக்கம்போல் ஒரு நாள் இரவில் சோதனைகள் செய்தனர். ஹெரான் அன்டு லாலெஸ்" என்னும் சைக்கிள் கடையும் சோதனை செய்யப்பட்டது. அக்கடையின் அடித்தளத்தில் தொண்டர்கள் வெடி குண்டு செய்யும் அறை இருந்தது. குண்டு செய்யும் கருவிகளையும், ரிவால்வர்களேயும் கண்டு, சிப்பாய்கள் தொண்டர்கள் அங்கு எப்பொழுது வேலைசெய்ய வரு வார்கள் என்று வினவினர்கள். 9 மணிக்குத் தொண் டர்கள் வரக்கூடும் என்று தகவல் கிடைத்ததால், சிப் பாய்களில் சிலர் கடைக்குள்ளும், சிலர் வெளியில் தெரு விலுமாக மறைந்து காத்திருந்தனர். குண்டு செய்யும் தொண்டர்கள் வழக்கம்போல் அக் கடைக்குள் புகுந் திருந்தால், அவர்கள் வாழ்வு அன்ருேடு முடிந்திருக்கும். ഋത്ര് அச்சமயத்தில் அவர்களுக்கு உதவியாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. எவனே ஒரு பையன் தெருவில் ஒரு நண்பனே எதிர்பார்த்துக் காத்து நின்றுகொண் டிருந்தான். அவனேச் சிப்பாய்கள் சந்தேகித்துப் பிடிக்க முயன்றதால், அவன் சைக்கிளில் ஏறி விரைவாகச் சென் ருன். சிப்பாய்கள் அவனேச் சுட்டுக் காயப்படுத்தி விட் டனர். அங்கு குண்டோசை கேட்டதால், அப்ப்க்கத்தி லுள்ள ஜனங்கள் சிலர் பல திசைகளுக்கும் சென்று, அங்கு வந்துகொண்டிருந்த தொண்டர்களுக்கு எச். சரிக்கை செய்தனர். தொண்டர்களும் கூட்டத்தோடு