பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 மைக்கேல் காலின்ஸ் அறிவான். தளர்ந்த உள்ளத்திற்கு வீரம் புகட்டுவான். ஆனல், பொய்யும் புலவும் கிறைந்த அரசியல் உலகில், தந்திரம் மிக்க லாயிட் ஜார்ஜ-டன் பேரம் பேச அவளுல் முடியுமா ? முடியுமோ முடியாதோ, அவனேத் தவிர அதற்கு அச்சமயம் வெளியில் வேறு ஆளில்லை. 1920, அக்டோபர், 6-ம் தேதி லண்டன் டைம்ஸ் பத்திரிகையில், பார்லிமென்டு அங்கத்தினரான பிரிகேடி யர் ஜெனரல் கோக்கெரில் என்பவர் அயர்லாந்துடன் போராட்டத்தை நிறுத்திச் சமாதானம் செய்யவேண்டும் என்றும், இரு.காட்டுப் பிரதிநிதிகளும் சமத்துவமாய்க் கூடிக் கலந்து பேசவேண்டும் என்றும், இரு பக்கத்தா. ரும் விட்டுக் கொடுத்து அம்ைதியை நிலைநாட்டவேண் டும் என்றும், ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஜான் ஸ்டீல் என்ற அமெரிக்கப் பத்திரிகைக்காரர் ஒருவர் சில முக்கியஸ்தர்கள் மூலம் லாயிட் ஜார்ஜ . டைய கருத்தையும் கிரிபித்தின் மனுேபாவத்தையும் அறிய முயற்சித்தார். லாயிட் ஜார்ஜ் சமாதானத்தை விரும்புவ தாகவே தெரிந்தது. கிரிபித்தும், கோக்கெரிலுடைய கடி தப்படி, கெளரவமான முறையில் சமாதானத்திற்குத் தயாரா யிருப்பதாய் அறிவித்தார். இவை யெல்லாம் நவம்பர் 21-ம் தேதி சம்பவத்திற்கு முற்பட்டவை. ஆல்ை இடையில் கிரிபித் ஏன் கைதி செய்யப்பட்டார் ? அவர் கைதி செய்யப்பட்டது லாயிட் ஜார்ஜ-க்குத் தெரியா தாம். ஒரு வேளை, கிரிபித்தைச் சிறையில் வைத்துக் கொண்டே சமாதானம் பேசுவது நலமென்று ஆங்கில அரசாங்கம் கருதியது போலும் ! ஆங்கில மந்திரி சபையார் அடுத்தாற்போல் ஆர்ச் பிஷப் குளுன் என்னும் ஆஸ்திரேலிய மதகுரு மூலம்