பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமாதான முயற்சி 223 சமாதான முயற்சிகள் செய்தனர். - குளுன் லண்டனப் பார்ப்பதற்காகச் சென்றவர். அவர் டப்ளினுக்கும் சென்று கிரிபித்தைக் கண்டு பேசினர். கிரிபித் டெயில் ஐரான் மந்திரி சபையின் காரியதரிசிக்கு அவரிடம் ஒரு கடிதம் கொடுத்தனுப்பினர். அக்கடிதத்தில் = அவர் கூறியதாவது : o ஆர்ச்பிஷப் குளுன் தாம் லண்டனிலிருந்து எனக்குக் கொண்டுவந்த கடிதத்தைத் தங்களுக்குக் காட்டுவார். அது வரவு செலவு மந்திரி (காலின்ஸு)க்கும் மற்றும் பொதுவாக மந்திரி சபைக்கும் போகவேண்டியது. மை. கா. வை ஒற்றர்கள் பின் தொடர்ந்து கவனிக்கா மல் இருப்பதாக அவர்கள் உறுதி கூறியிருப்பினும், ஆர்ச் பிஷப் அவரைப் பார்ப்பது உசிதமில்லை. நாம் அவர்களே நம்பமுடியாது. ஆல்ை தங்கள் மூலமோ, வேறு தாங்கள் ஆர்ச்பிஷப்புக்குக் குறிப்பிடும் நபர் மூலமோ சம்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளலாம். - தொழிலாளர் தலைவர்களான ஹென்டர்ஸனும் ஆதம்ஸ் னும் நேற்று இங்கிருந்தார்கள். பிரிகேடியர்-ஜெனரல் கோக்கெரிலுடைய யோசனைகளைப் பற்றி நான் வெளிப் படையாகக் கூறியிருக்கும் விஷயத்தைக் கவனிக்குமபடி கான் அவர்களுக்குச் சொன்னேன். சமாதானத்திற்கும் டெயில் ஐரான் ஒரு முறை கூடுவதற்கும் அவர்கள் ஆவலும் றிருக்கின்றனர். ஆர்ச்பிஷப் அறிவிக்கும் பிரேரேப&ணகளின்படி մէ ԼԸ:51 பக்கத்தில் நாம் கொள்கையில் எதையும் விட்டுக் கொடுப்பதாகாது என்று நான் நம்புகிறேன். ஆங்கில அர சாங்கம் இப்பொழுது நடத்திவரும் போராட்டத்தை நிறுத்தி விடுமாயின், தற்காப்புக்காக நாம் செய்து வரும் காரியங் களையும் நிறுத்த முடியும். டெயில் ஐரான் அங்கத்தினர்களே யும் மற்றவர்களையும் பின்தொடர்வது கிற்கவேண்டும்.