பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமாதான முயற்சி 227 தன் கட்சிக்கு மிக்க ஆதரவானது என்று கூறி, அவன் அதை வரவேற்ருன். குளுன் அயர்லாந்துக்குத் திரும்பி வந்து கிரிபித் தைச் சிறையில் கண்டு பேசினர். கிரிபித் காலின் ஸ்-க்கு ரகசியமாக ஒரு கடிதம் அனுப்பினர். அதில், கால்வே கவுன்சில் தீர்மானத்தையும் பிற்போக்காள ருடைய வேண்டுகோள்களேயும் கண்டு ஸின்பினர்கள் முற்றிலும் தளர்ந்துபோய்விட்டதாக ஆங்கில அரசாங் கம் கருதுவதையும், ராணுவத்தார் லாயிட் ஜார் ைஜச் சமாதான வழியிலே செல்லவிடாது தடுத்துவருவதையும், மானக்கேடான எந்தச் சமாதானத்தையும் தாம் ஒப்புக் கொள்ள முடியாது என்று குளூனிடம் கூறியதையும் விளக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும் குளுன் தம்மை மறுபடி கண்டு பேசப்போவதாயும், இடையில் காலின்ஸின் அபிப்பிராயத்தைக் கேட்க விரும்புவதாயும் அவர் எழுதியிருந்தார். காலின்ஸ் அவருக்கு அனுப்பிய மறுமொழில் கூறிய தாவது : கெளரவமான நிபந்தனைகளின் பேரில் சமாதானத் தைப் பெற நாம் நமது சம்மதத்தைத் தெளிவாகக் காட்டி யிருக்கிருேம். லாயிட் ஜார்ஜ் முற்றிலும் பணிந்துவிட வேண்டும் என்று வற்புறுத்துகிருர். இவற்றிற்கு நடுவே வேறு வழியில்லே மேற்கொண்டு (பேச்சை) வளர்ப்பது விணுகும். அதல்ை அவர்களேக் காட்டிலும் நாம் ஆத்திரப் படுவதாகத் தோன்றும். டாக்டர் குளுன் லாயிட் ஜார்ஜின் - து.ாதுவரே தவிர நம்முடையவர் அல்லர். லாயிட் ஜார்ஜ் தவறுதலாக எண்ணவேண்டிய தில்லை. 恩3 ரிஷ் குடியரசுப் படை உடைக்கப்படவில்லை. ஜனங்களுடைய ஊக்கமும் அடங்கி விடவில்லை. ஆயினும்,