பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 மைக்கேல் காலின்ஸ் அவர்கள் கால்வே தீர்மானத்தை முக்கியமாய்க் கருதுவது போல், உண்மையாக இருக்கும் நிலையைத் கருத மாட் டார்கள்...' லாயிட் ஜார்ஜ் காமன்ஸ் சபையில் பேசிய அன்று. இரவுதான் கார்க் நகரம் எரிக்கப்பட்டது. டாக்டர் குளுன் மீண்டும் கிரி பித்தைக் கண்டு. பேசினர். அது சம்பந்தமாக கிரிபித் காலின்ஸ்-க்கு. எழுதிய கடிதமாவது : 4 மணி, செவ்வாய்க்கிழமை, டிஸம்பர் 14-ம் தேதி. டாக்டர் குளுன் இங்கு வங்கிருக்கிரு.ர். ஆங்கில மந்திரி சபை ஒருமாத காலத்திற்குத் தாற்காலிக சமாதானத். திற்கு இணங்குவதாக அவருக்கு அறிவிக்கிறது. சோதனை கள், கைதி செய்தல், தொடர்தல், கட்டிடங்களே அழித் தல், எரித்தல், கொள்ளை, ஆயுத சமர்ப்பணம் முதலிய ஒன்றும் அக்காலத்தில் இல்லை. ராணுவ விசாரணைகளைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. நான் பாணுவ விசாரணை களும் நிற்க வேண்டும் என்று எடுத்துக் காட்டினேன். அமைதியான வேலை’களைக் குறித்து அவர்கள் ஆட் சேபிக்கிருர்கள். குளுன் அதைப்பற்றி விளக்கியிருக்கிருர். எப்படியும் அமைதியான நம் வேலைகள் நடக்க முடியுமாத தால் இது எனக்கு மிகவும் முக்கியமாய்த் தோன்றவில்லை." டாக்டர் குளுன் அக்கடிதத்துடன் ஒரு குறிப்பு எழுதி அனுப்பினர். அதில் அவர் பத்திரிகைகளில் வெளிவரத்தக்க முறையில் டெயில் ஐரான் கூடுவது போன்ற வேலைகளே கி.அறுத்தப்பட வேண்டும் என்று விளக்கினர். மேலும் கார்க் நகர தகனம் லாயிட் ஜார் ஜ-க்குப் பக்கபலமாக இருக்கிறது என்றும், அதை