பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமாதான முயற்சி 223 வைத்துக்கொண்டு அவர் தம் எதிரிகளே எதிர்க்க முடியும் என்றும் கூறினர். காலின்ஸ் அன்று தினமே கிரி பித்துக்கு ஒரு கடிதம் அனுப்பின்ை. அதில் டெயில் அங்கத்தினர் யாவரும் தாராளமாய்க் கூடுவதற்கு அது மதிக்கப் பட்டாலன்றி இங்கிலாந்தின் ராஜிப் பேச்சுக் களேக் கவனிக்க முடியாது என்று கிரிபித் அறிக்கை வெளியிடவேண்டும் என்று டெயில் தீர்மானித்திருப்ப தாக அறிவித்தான். டிசம்பர் 15-ம் தேதி, காலின்ஸ் லண்டனிலிருந்த டெயில் ஐரான் பிரதிநிதியான ஆர்ட் ஒபிரியனுக்கு ஒரு கடிதம் அனுப்பின்ை. அதில், அயர்லாந்தில் அதிகாரி கள் நடத்திய அதிக்கிரமங்களுக்கு மற்ற மந்திரி சபை யினரைப் போலவே லாயிட் ஜார்ஜையும் பொறுப் புடையவராகக் கருதவேண்டும் என்றும், ஆங்கிலத் துருப்புகள் செய்த பயங்கரச் செயல்கள் இங்கிலாங் திலுள்ள பெரிய அதிகாரிகளின் மனத்தைப் பாதிக்கும் என்று தான் கருதவில்லை என்றும் அவன் குறிப்பிட் டிருந்தான். மேலும் லாயிட் ஜார்ஜ் மூலம் சமாதானம் ஏற்படும் என்பதிலும் அவனுக்கு நம்பிக்கையே யில்லை. டெயில் ஐரான் சமாதானத்திற்குப் பின்கண்ட நிபந்தனைகளே ஏற்படுத்தி அவற்றை வெளியிடவேண்டும் என்று ஒபிரியன் அறிவித்தான் : 1. ஆயுதம் தாங்கிய சகல ஆங்கிலத் துருப்புகளையும் திரும்ப அழைத்தல். - = H 2. ஐரிஷ் குடியரசை ஒப்புக்கொள்ளுதல். 3. 1800-க்குப் பின்னல், அயர்லாந்து, விகிதத்திற்கு மேலாகச் செலுத்திய வரிப் பணத்தை வாபஸ் செய்தல் : பொருளாதாரக் கமிஷன் செய்திருக்கும் முடிவுகளை ஆதாரமாய்க் கொண்டு இதைக் கவனிக்க வேண்டியது.