பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் நிறுத்தம் 23.5° எவ்வளவு கஷ்டமான நிலையில் வேலைசெய்தனர் என்பது புலனுகும். காலின்ஸின் காரியாலயங்கள் பன்முறை சோதனையிடப்பட்டன. டப்ளினில் கர்பியூ உத்தரவு இரவு 8-30 மணியிலிருந்தே அமலுக்கு வந்தது. ஆயி னும், சிப்பாய்கள் சிறு சிறு கூட்டங்களாகப் பிரிந்து நாட்டுப் பக்கங்களில் ஜனங்களோடு உறவாடவேண்டும் என்று அரசாங்கத்தார் ரகசிய உத்தரவு அனுப்பி யிருந்தனர். அதைக் காலின்ஸ்-ம் ரகசியமாகப் பார்த்து. கிலேமை மாறிவருகிறதை அறிந்துகொண்டான். சமாதான விஷயமாக ஜெனரல் ஸ்மட்ஸ் ரகசியமாக டப்ளினுக்கு வந்தார். அவர் தென் ஆபிரிகாவின் பிர தம மந்திரி. அவர் டிவேலராவைக் கண்டு பேசி, தென் ஆபிரிகாவில் போயர்கள் ஒப்புக்கொண்டிருக்கும் அரசி யலைப் போன்ற ஒரு திட்டத்தை ஏற்றுக்கொண்டு சமா தானம் செய்துகொள்ளும்படி ஆலோசனே கூறினர். சிறைச்சாலையிலுள்ள கிரிபித், டுக்கன் முதலியோர் மூல மாக வேறு வழிகளில் சமாதானப் பேச்சுக்கள் நட்ைபெற்றன. இவையெல்லாம் ஆங்கில அரசாங்கம் தேக நிலையைச் சோதித்துப் பார்த்த உபாயங்கள் என்று எல். லோருக்கும் தெரியும். கடைசியாக, ஆங்கிலப் பிரதம மந்திரி லாயிட் ஜார்ஜ், ஜூன் மாதம் 24-ம் தேதி, டிவேலராவுக்கு நேராக 9(్య கடிதம் எழுதினர். மன்னர் பிரானின் விருப்பப்படி இரு நாடுகளுக்குள்ளும் சமாதானமும் சிநேக பாவமும் * ...) படவேண்டியது அவசியும் என்றும், தென் அயர்லாந்தி, பெரும்பாலான ஜனங்களின் பிரதிநிதியாகத் தேம், தெடுக்கப்பட்டிருக்கும் டிவேலரா, வட அயர்லாந்தி, பிரதிநிதியும் பிரதம மந்திரியுமான ஸர் ஜேம்ஸ் கிரெய்,