பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*236 மைக்கேல் காலின்ஸ் கையும், வேறு தமக்குப் பிரியமுள்ள உதவியாளரையும் அழைத்துக்கொண்டு சமாதானப் பேச்சு நடத்த வர வேண்டும் என்றும், வருகிறவர்கள் யாவருக்கும் தக்க பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அவர் அக்கடித மூலம் அறிவித்தார். டிவேலரா, அயர்லாந்து பிளவற்ற ஒரு நாடு என்ப தையும், தேசிய சுயநிர்ணயத் தத்துவத்தையும் புறக் கணிக்காம லிருந்தால் சமாதானப் பேச்சுக்கு இடமுண்டு என்றும், விரிவான கடிதம் அனுப்புவதற்கு முன்னுல் தாம் தேசத்தின் சிறுபான்மைக் கட்சியாரைக் கலந்து பேசுவதாயும் பிரதம மந்திரிக்குப் பதில் அனுப்பினர். பின், மறுபடி ஜூலை மாதம் 8-ம் தேதி முடிவான பதிலே யும் அனுப்பிவைத்தார். இடையில் கிரிபித், டுக்கன், பார்ட்டன் முதலியோர் விடுதலை செய்யப்பட்டனர். பொது ஜனங்கள் விரை வில் சமாதானம் வரப்போவதை எண்ணி மகிழ்ச்சி யடைந்தனர். அரசாங்கப் படைகளின் சார்பாக ஜென. ரல் மாக்ரெடி மான்ஷன் மாளிகையில் தாற்காலிகமாகச் சமாதானம் செய்வதற்குத் தொண்டர் படைத் தலைவர் களுடன் கலந்து பேசினர். இறுதியில் இரு பக்கத் தாரும் சமாதானப் பேச்சு முடியும் வரை போரை நிறுத்த வேண்டும் என்று தாற்காலிக உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. சமாதானம் ஜூலை மாதம் 11-ம் தேதி திங்கட்கிழமை நடுப்பகலில் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. சமாதானம் தொண்டர்களுடைய மகத்தான வெற்றி யைக் குறிப்பதாய்ப் பொதுஜனங்கள் மகிழ்ச்சி யடைந்த னர். ராணுவ பலத்தில் தொண்டர்களைப் பார்க்கினும்