பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 மைக்கேல் காவின்ஸ்

TI --- முன்வந்து அட்டகாசஞ் செய்தனர். ஆறுமாத காலம் போராட்டத்தை நிறுத்தியதால், பொதுவாகத் தொண் டர் படையின் கட்டுப்பாடும் ஒழுக்கமும் உலேந்துவந்தன. சமாதான காலத்திலும் புதிய தொண்டர்கள் சேர்ந்து வந்தனர். புதிதாய்ச் சேர்ந்தவர்கள் பழைய தொண்டர் களுடைய உறுதியும் கட்டுப்பாடு மின்றி, அந்நாள் வரை போராட்டங்களில்ை ஏற்பட்ட துன்பங்களே உணராத வராய், மீண்டும் போர்வெறி கொண்டு கின்றனர். பல இடங்களிலும் தொண்டர்களுக்குப் பயிற்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டன. 19, 20 வயதுடைய வாலிபர்கள் தொண்டர் படையில் சேர்ந்து, கையில் ஆயுதங்கள் கிடைத்தவுடன் தாங்களே தேசத்தில் அதிகாரிகள் என்அணு எண்ணி, வினை கலகங்களிலும் குழப்பங் களிலும் ஈடுபட்டனர். சுருங்கச் சொன்னுல், தேசமெங் கும் ஒருவகையான அராஜகம் தோன்றிவந்தது. செப்டம்பர்மீ" 12-ம் தேதி டிவேல்ரா லாயிட் ஜார்ஜின் அழைப்பை ஏற்றுக்கொண்டு, தம் கட்சியின் கொள்கையை விளக்கி அவருக்கு ஒரு கடிதம் எழுதினர். அயர்லாந்தின் தேசிய அபிலாஷைகளை அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் சேருவதோடு சமரசப்படுத்துவ தற்காக ஐரிஷ் பிரதிநிதிகள் வரவேண்டும் என்று லாயிட் ஜார்ஜ் கூறியதை அவர் ஏற்றுக்கொண்டார். ஆல்ை, அத்துடன் அவர் ஐரிஷ் பிரதிநிதிகளைப் பற் றியும் பின்வருமாறு கூறினர் : எங்கள் தேசம் தன் பரி பூரண சுதந்திரத்தை விளம்பரப்படுத்தி யிருக்கிறது. அது தன்னைச் சுயேச்சையான ராஜாங்கமாகக் கருது இறது. அந்த ராஜாங்கத்தின் பிரதிநிதிகளாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பாதுகாப்பாளராகவுமே, நாங்கள்