பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் நிறுத்தம் 243

  • = a_

எங்கள் ஜனங்களின் சார்பாக வேலை செய்ய அதிகாரமோ அல்லது சக்தியோ படைத்திருக்கிருேம். H. ". லாயிட் ஜார்ஜ் கட்ைசியாகக் கூறப்பட்ட இக்கூற்றை ஆதரிப்பதால்ை, அது ஐரிஷ் குடியரசை மதித்து ஏற்றுக் கொள்வதாகும். அப்படியால்ை ராஜிக்குப் பேச்சே வேண்டியதில்லை. எனினும், டிவேலராவின் கடிதம் மக்ராத், போலண்டு என்னும் இருவர் மூலம் விரதம மந்திரிக்கு அனுப்பப்பட்டது. அவர், கடிதத்தில் கண்ட விஷயப்படி பிரிட்டிஷ் அரசாங்கம் முதலி லேயே ஐரிஷ் குடியரசை மதிக்க முடியாது என்றும், ஆல்ை ஐரிஷ் பிரதிநிதிகள் தங்கள் குடியரசை ஆதரித்து அதை ஏற்றுக்கொள்ளும்படி வாதாட உரிமையுள்ள வர்கள் என்றும் கூறினர். அந்நிலையில் டிவேலராவின் கடிதம் சமாதானத்திற்கே வழியில்லாது செய்ததால், அக்கடிதம் தம்மிடம் கொடுக்கப்படாததாகத் தாம் பாவிக்கத் தயாரா யிருப்பதாயும், அதைக் கொணர்ந்த து துவர் இருவரும் மீண்டும் அதை டிவேலராவிடம் கொடுத்து, மாற்றி எழுதும்படி சொல்லவேண்டும் என்றும் அவர் ஆலோசனை சொன்னர். துரதுவர்கள், மறுநாள் டெயில் கூட்டத்தில் அக்கடிதம் வெளிவருவ தால், வாபஸ் செய்ய நேரமில்லை என்று கூறினர். ஆயினும், அவர்கள். இருக்கும் கிலேமையைக் கூறித் தாங்கள் திரும்பி வரும்வரை டிவேலரா அக்கடிதத்தை வெளியிடாமல் இருக்கும்படி ஒரு தந்தி அனுப்பினர். ஆனால், டிவேலரா மறுநாள் டெயில் கூட்டத்தில் அக் கடிதத்தை வெளியிட்டுவிட்டார். ஐரிஷ் பிரதிநிதிகளாகச் சமாதான , மகாநாட்டுக்குச் செல்வதற்கு ஐவருடைய பெயர்கள் மேற்சொன்ன கூட்