பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 மைக்கேல் காலின்ஸ் டத்தில் உறுதிசெய்யப்பட்டன. ஆர்தர் கிரிபித், மைக்கேல் காலின்ஸ், ராபர்ட் பார்ட்டன், சமன் டுக்கன், ஜார்ஜ் கவான் டபி ஆகிய ஐவருமே அப்பிரதிநிதிகள். டிவேலரா தாம் குடியரசின் சின்னமாகத் தாய்காட்டி லேயே தங்கவேண்டும் எனறும், மற்றவர்கள் சென்ருல் போதும் என்றும் கூறினர். அவருடைய தீர்மானத் தைக் கண்டு மற்ற நண்பர்கள் வருந்தினர். ஏனெனில், ராஜிப் பேச்சில் முக்கியமான ஒவ்வொரு பிரச்னேயையும் அவரிடம் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. டிவேலரா தாம் பிரதம மந்திரிக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டுவிட்டதால், பிரதம மந்திரி சமா தானம் பேசுவதற்குத் தாம் அனுப்பிய அழைப்பை வாபஸ் வாங்கிக்கொண்டார். இதன் பிறகு அவ்விருவரும் தந்திகள் மூலமாயும் கடி தங்கள் மூலமாயும் தத்தம் கருத்தை விளக்கிக்கொண் டனர். டிவேலரா, ஆங்கில அரசாங்கம் ஐரிஷ் குடி யரசை முன்கூட்டியே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்றும், தங்கள் பிரதிநிதிகள் தாங்கள் குடியரசின் சார்பாக வருவதாக எண்ணுவதைத் தடுக்க முடியாது என்றும், முன்ல்ை மந்திரியைக் கண்டு பேசும் பொழுது தாம் குடியரசின் தலைவர் என்பதை மனத்தில் வைத்துக் ". கொண்டே பேசியதாயும் அறிவித்தார். முடிவில், லண்டனில் சமாதான மகாகாட்டைக் கூட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. --- ஆகஸ்ட்டு மாத ஆரம்பத்தில் டெயில் ஐரானின் விதிகள் திருத்தியமைக்கப்பட்டு ஒரு புதிய மந்திரி சபையும் அமைக்கப்பட்டது. புதிய மந்திரி சபை அங் கத்தினரின் விவரமாவது : 1- * -