பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 மைக்கேல் காவின்ஸ் நேரத்தைத் தன் சகோதரி ஜோஹன்னுவுடன் செலவிட்டு வந்தான். இரவில் வெகுநேரம் வரை அவன் விழித்திருக்க வேண்டியிருந்தது. ஆயினும், அவன் அதிகாலையில் எழுந்திருந்து வெளியே சென்று வேலே பார்த்து விட்டுக் காலை ஆகாரத்திற்கு மீண்டும் அங்கு வருவது வழக்கம். சிறையிலிருந்த ஒற்றனை பிராய் விடுதலையடைந்து அவனுக்கு உதவியாக வந்திருந்தான். காலை நேரத்தில் - காலின்ஸ் வெளியே செல்லும் பொழுது சில சமயங்களில் பிராய் அவனுக்குத் தெரியாமல் தொடர்ந்து செல்வ துண்டு. பிராய்க்கு எந்த நேரமும் காலின்ஸ்-க்கு ஏதாவது அபாயம் உண்டாகுமே என்று பயம் இருந்து வந்தது. காலின்ஸ் எத்தனேயோ வேலைகளுக்கிடையில் தன்னுடைய மதக் கடமைகளிலும் வழுவுவதில்லே அவன் கோவிலுக்குச் செல்வதும் பிரார்த்தனே செய் வதும் அவன் நண்பர்களுக்குக் கூடத் தெரியாது. அவர்கள் உறங்கிக்கொண்டிருக்கும் பொழுதே, அவன் எழுந்திருந்து தன் வேலைகளே முடித்துக்கொள்வான். அதிகாலையில் எழுந்திருந்து அவன் உறங்கிக்கொண் டிருக்கும் தோழர்களேக் காலப் பிடித்து இழுப்பதும், அவர்கள் போர்வைகளே எடுத்தெறிவதும் வழக்கம். இத்தனேக்கும் அவன் இரவில் படுக்கச் செல்லும் நேரம் 12 மணிக்கு மேலாகும். ஜீவாதாரமாய்க் கருதப்பட்ட பிரச்னைகளாகிய பிரிட்டிஷ் சம்பந்தம், வடகிழக்கு அல்ஸ்டர் ஆகிய இரண்டும் முடிவாக விவாதிக்கப்பட்டன. ஸ்ர் ஜேம்ஸ் கிரெய்க்கும் அவர் மந்திரிசபையும் அயர்லாந்து முழு வதற்கும் பொதுவான ஒரே அரசாங்கத்தின் கீழிருக்க