பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன்படிக்கை 251. மறுத்ததால், அல்ஸ்டர் பிரச்னே தீர்க்க முடியாமல் இருந்தது. பிரிட்டிஷ் சர்க்காரும் அவர்களேக் கட்டாயப் படுத்த மறுத்தது. எனவே, அவ்விஷயத்தில் ஐரிஷ் பிரதிநிதிகள் விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதல்ை அயர்லாந்து இரண்டாகப் பிரிக் கப படடது. இடையில் மகாநாடு முறிந்துவிடும் போலிருந்தது. ஆல்ை, முடிவாக டிசம்பர்மீ 5-ம் தேதி மாலை 5. மணிக்கு ஆரம்பமான கூட்டம் மறுநாள் காலை 2-30 மணிவரை நடைபெற்றது. அப்பொழுதுதான் சமாதான உடன் படிக்கையை முடிவு செய்து, இரு கட்சியாரும் அதில் கையெழுத்திட்டனர். சமாதான உடன்படிக்கையின் முக்கியமான ஷரத் துக்களின் சுருக்கம் கீழேயுள்ளது : 1. அயர்லாந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் கானடா, ஆஸ்திரேலியா, நியூஜீலந்து, தென் ஆபிரிகள் முதலிய குடியேற்ற நாடுகளுக்கு நிகரான அரசியல் அந்தஸ்தைப் பெறுகின்றது. அமைதி, ஒழுங்கு, நல்லரசாங்கம் ஆகிய வற்றை நிலைநிறுத்த வேண்டிய சட்டங்களைச் செய்வதற்கு அதற்கு ஒரு பார் லிமெண்ட் உண்டு. பார்லிமெண்டுக்குப் பொறுப்புள்ள ஒரு கிர்வாக அரசாங்கமும் உண்டு. அந்த நிர்வாக அரசாங்கம் ஐரிஷ் பிரீஸ்டேட் எனப் பெயர் பெறும். 2. பின்னல் குறிப்பிடப்படும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு, ஐரிஷ் பிரீஸ்டேட் பிரிட்டிஷ் பார்லிமெண் டோடும், அரசாங்கத்தோடும் பெறும் சம்பந்தம் கானடாவி னுடையதைப் போலவே இருக்கும். பிரீஸ்டேட்டுக்கும் மன்னர் பிரானுக்கும் அல்லது அவர் பிரதிநிதிக்கும், பார்லி