பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன்படிக்கை 253" ஐரிஷ் பிரதிநிதிகளுக்கும் இங்கிலாந்துக்கும் உடன் படிக்கை முடிவாகிவிட்டதென்ற செய்தியைக் கேட்ட ஐரிஷ் மக்களிடையே பரபரப்பு ஒன்றையுங் காணவில்லை. அவர்கள் சென்ற ஆறுமாத காலமாய் நிலைமை எப்படி மாறுகிறதோ என்று கொண்டிருந்த சந்தேகமும் பயமும் நீங்கி, யுத்தம் சமாதானம் இரண்டுக்கும் இடையே திரி சங்கு கிலேயில் நிற்பது ஒய்ந்தது என்று மகிழ்ச்சியுற்ற னர். சென்ற மூன்று வருஷ காலமாய் நடந்துவந்த போராட்டம் காரணமாக, அவர்கள் டெயில் ஐரானின் மந்திரிசபையில் அளவற்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். எப்படியாவது மந்திரிசபையார் தேசத்திற்கு விடிவு காலத்தையும் அமைதியையும் கொண்டுவருவர் என் பது அவர்களின் நம்பிக்கை. இங்கிலாந்துடன் சம்பந்தம் வைத்துக்கொள்ளாது அயர்லாந்து தனித்த குடியரசாகிவிட வேண்டும் என்ற பூரண சுயேச்சைக் கொள்கையுடையோர் உடன்படிக் கையை வெறுத்துப் பேச ஆரம்பித்தனர். ஆங்கில மன்னருக்கு விசுவாசம் காட்டுவதை அவர்கள் ஆட்சே பித்தனர். மற்றும் சில தேசாபிமானிகள், சிறிய தீவான அயர்லாந்தில் வடக்கிலும் தெற்கிலும் இரண்டு அரசாங் கங்கள் ஏற்படப் போவதைக் கண்டு, தேசத்தை இரண்டாக வெட்டுவதை ஆட்சே பிக்காமல் ஐரிஷ் பிரதி - o நிதிகள் ஏற்றுக்கொண்டதற்காக வருந்தினர். பொதுஜனங்களோ, சென்ற 30-வருவடிங்களாகப் பார்லிமெண்டுக் கட்சியாருடன் சேர்ந்து போராடி ஒன் அறும் கிடைக்காமல், , எந்தச் சுய ஆட்சி மசோதாவும் அளிக்காத பெரிய சீர்திருத்தத்தைப் புதிய குடியேற்ற நாட்டு அந்தஸ்து அளித்ததால், அது ஒரு பெரும்