பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன்படிக்கை -- 255 பட்டிருக்கின்றது. இதுவரை இருந்ததுபோல் இடைக்காலத் தில் கட்டுப்பாட்டுடன் இருக்கும்படி நான் ஜனங்களே வேண்டிக்கொள்ளுகிறேன். மந்திரி சபை அங்கத்தினர் தங்களுக்குள் அபிப்பிராய பேதங்கள் இருப்பினும், தங்க ளுடைய உத்யோகங்களே வழக்கம்போல் பார்த்துவரத் தயாரா யிருக்கின்றனர். (நமது) படை ராஜிய நிலைமையால் பாதிக்கப்படா மல், பழைய அதிகாரிகளின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு இருந்து வருகிறது. நம் ஜனங்களுக்குப் பெருஞ் சோதனை வந்திருக் கின்றது. மனக்கசப்பும், ஒருவரையொருவர் பழித்துக் கூறுவதுமின்றி, நாம் அதைக் கண்யத்துடன் ஏற்றுக்கொள் ளுவோம். சட்ட பூர்வமாக, நம்முடைய ராஜீய வேற்றுமை களை ஒழித்துக்கொள்ளக் குறிப்பிட்ட வழி இருக்கிறது. நாம் அதிலிருந்து விலகக் கூடாது. மந்திரி சபையா ருடைய நடத்தை தேச மக்கள் அனேவருக்கும் வழிகாட்டியா யிருக்கவேண்டும்.' ஜனங்களுக்கு டெயில் மந்திரி சபைக்குள் ஏற்பட்டு வந்த வேற்றுமைகளும் விகற்பங்களும் நன்ருய்ப் புரிய வில்லை. டிவேலரா, கதால் புருகா, ஸ்டாக் கூட்டத்தாருக் கும், ஆர்தர் கிரிபித் காலின்ஸ் கூட்டத்தாருக்கும் இடையே பெரிய மன ஸ்தாபம் வளர்ந்து வந்ததை அவர்கள் உணர்ந்துகொள்ள வெகு நாளாயிற்று. டிசம்பர் 14-ம் தேதி டெயில் ஐரான் கூடிய பொழுது, அவர்கள் எல்லாத் தலைவர்களேயும் வேற்றுமையின்றிப் பாராட்டி வரவேற்றனர். அக்கூட்டத்தில் டிவேலரா, ஐரிஷ் பிரதிநிதிகள் உடன்படிக்கையை முடிவு செய்வ தற்கு முன்னல், அதன் நகலேத் தம்மிடம் காட்டிச் சம்மதம் பெறுவதாய்ச் சொன்னதாயும், அவர்கள் அவ்