பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன்படிக்கை 257 சுதந்திரத்தை மறுத்தும் வந்த ஒரு பகைவனுடன் போராடி வந்தது. இப்பொழுது அளிக்கப்பட்டுள்ளதை மறுப்பதால் ஏற்படும் போராட்டத்தில், உலகத்தின் அதுதாபமும், பிரிட் டிஷ் ஏகாதிபத்தியத்திலுள்ள நாடுகளுடைய அதுதாபமும் எதிராக இருக்கும். அத்தகைய பயனற்ற போரில் மனச் சாட்சிப்படி நடக்கும் எந்த ஐரிஷ்காரனும் ஒர் ஐரிஷ்கார னுடைய உயிருக்குக்கடடப் பொறுப்பேற்றுக்கொள்ள மாட் டான் என்று நான் நம்புகிறேன்." உடன்படிக்கையை உறுதிப்படுத்த வேண்டும் என் அனும் தீர்மானத்தை nன் மக்கியோன் ஆமோதித்தான். பின்னர் காலின்ஸ் ஆதரித்தான். தன் பேச்சில் துவே ஷமோ பகைமையோ புகுந்துவிடாமல், அவன் எச்சரிக் கையாகவும் தீவிரமாகவும் பேசின்ை. ஐரிஷ் பிரதிநிதி கள் ஆங்கிலேயரின் ஏமாற்ற வலையில் சிக்கிவிட்டதாக ஒர் அங்கத்தினர் குறை கூறியதைக் கேட்டு, அவன், சென்ற 5 வருஷ காலமாகத் தான் அவ்வலையில் சிக்காமல் இருந்ததை எடுத்துக்காட்டி, இப்பொழுதும் தான் ஏமாறவில்லை என்று கர்ஜித்தான். உடன்படிக்கையை இப்பொழுது ஆ ட்சேபிப்பவர்கள் பிரதிநிதிகளே நியமிக் கும் பொழுதே தங்கள் கருத்தை வெட்ட வெளிச்சமாக ஏன் கூறவில்லை?” என்று வினவினன். அடுத்தாற்போல், டிவேலரா உடன்படிக்கையை எதிர்த்துப் பேசினர். குடியரசைப் பாதுகாப்பதாகத் தாங்கள் இதுவரை ஜனங்களிடம் கூறி வந்ததைப் பொய்யாக்கக் கூடாது என்றும், முன் நடந்த தேர்தல் களிலெல்லாம் தாங்கள் குடியரசின் பெயராலேயே தேர்க் தெடுக்கப் பெற்றதாயும் அவர் விரித்துரைத்தார். உடன்படிக்கையைக் குறித்துச் சாதகமாகவும் பாதக மாகவும் டெயில் ஐரானில் நிகழ்ந்த சொற்பொழிவுகள் மை-17