பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 மைக்கேல் காலின்ஸ் காலின்ஸ் எழுந்திருந்து பொதுஜனப் பாதுகாப்பிற்கா: ஒரு கமிட்டியை நியமிக்க வேண்டும் என்றும், அவசி மால்ை இரு கட்சிகளிலிருந்தும் அதற்கு அங்கத்தினர் களே எடுத்துக்கொள்ளலாம் என்றும் ஆலோசனை கூறி. ஞன். அச்சமயத்தில் ரீமதி கிளார்க் டிவேலராவைச் மீண்டும் ஐரிஷ் குடியரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்க, வேண்டும் என்று பிரேரேபித்தாள். காலின்ஸ், டிவேலி ராவையே மீண்டும் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், பொது ஜனங்கள் தங்களேக் கேவலமாகக் கருதுவார்கள் என்று விளக்கினன். ஆயினும், உடன்படிக்கைக்கு விரோதமா யுள்ளவர்கள் டிவேலராவையே தலைவராகத் தேர்ந் தெடுக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்தனர். முடி வில் ஒட் எடுக்கப்பட்டது. டிவேலராவுக்கு விரோதமாக 60 வாக்கும், ஆதரவாக 58-ம் கிடைத்ததால், அவர் தோல்வியுற்ருர். உடனே கிரிபித் எழுந்து, அன்று அந்த (էքե-6*յ டிவேலராவுக்கு எதிராக ஏற்பட்டதாகக் கருதக் கூடாது என்றும், உடன்படிக்கைக்கு ஆதர வாகவே பெரும்பான்மையான அங்கத்தினர்கள் வாக் களித்ததாகக் கருதவேண்டும் என்றும் கூறினர். என் வாழ்க்கையில் நான் சந்தித்தவர்களுக்குள் தலைவர் டிவேலராவைப் பார்க்கினும் என் அன்புக்கும் மரியா தைக்கும் பாத்திரமான மனிதர் வேறில்லே என்பதை நான் இப்பொழுது கூற விரும்புகிறேன். அவருடைய தற். போதைய நிலைமைக்கு நான் முற்றிலும் வருந்துகிறேன். நாங்கள் அவரை எங்களுடன் இருக்க வேண்டுகிருேம்!" என்று அவர் கனிந்துருகும் மொழிகளால் டிவேலராவின் கூட்டுறவை நாடினர். டிவேலராவும், சமயத்திற்கு ஏற்ப, தேசாபிமானமும் வீரமும் ததும்பும்படி சொற் பொழிவாற்றினர். உடன்படிக்கை காரணமாக ஏற்பட்ட