பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 மைக்கேல் காலின்ஸ் வேலை முறையை விளக்கும்படி வேண்டினர். கிரிபித் கூறியதாவது : - நாங்கள் உடன்படிக்கையை விடத் தயாரா யில்லை தேசத்தின் நன்மையைக் கருதி டிவேலராவை நான் எதிர்க்கிறேன். ஆரம்பம் முதலே நான் சொல்வி வருவது போல் டெயில் இருக்கப் போகிறது ; பிரீஸ்டேட் ஒரு தேர் தலுக்கு ஏற்பாடு செய்யும்வரை அயர்லாந்தின் குடியரசும் இருந்துவரும். நான் எவ்வித எதிர்ப்பையும் வேண்ட வில்லை. நான் கேட்ப தெல்லாம் அது ஒன்றுதான். இதுவரை யும் எந்த ஐரிஷ்காரனின் மேலும் சுமத்தப்படாத மிகக் கடினமான வேலே நம் மேல் சுமத்தப்பட்டிருக்கிறது. ஐரிஷ் மக்களிடையே நாங்கள் சென்று, பிரிஸ்டேட்டை அவர்களுக்கு அளித்து, அவர்கள் இஷ்டம் போல் முடிவு செய்யும்படி கேட்கும்வரை, எங்களை எதிர்த்துத் தடை செய்ய வேண்டாம் என்பதே நாங்கள் கேட்டுக்கொள்வது. இது ஒன்றுதான் எனது வேலே முறை. ஐரிஷ் மக்கள் பிரீ, ஸ்டேட்டை உதறிக் கள்ளி, குடியரசை மேற்கொண்டால், கானும் மற்றவர்களைப் பின்பற்றுவேன். அயர்லாந்தை யும், எனக்கு விரோதமாயுள்ள தோழர்களேயும் நான் கேட் டுக் கொள்வதெல்லாம் எங்கள் வழியில் தடைகளை ஏற்படுத் தாமல் இருக்கவேண்டும் என்பதே. ஐரிஷ்காரர் மேல் சுமத் தப்பட்ட பொறுப்புக்களில் தலைசிறந்த கடினமான பொறுப் பை அடுத்த மூன்று மாதங்களுக்குள் நாம் மேற்கொள்ளப் போகிருேம்.' ஜனவரி மாதம் 14-ந் தேதி, உடன்படிக்கையை ஆதரிக்கும் அங்கத்தினர்களும் டிரினிட்டி கலாசாலைப் பிரதிநிதிகளும் ஒன்றுகூடி ஆலோசித்து, மைக்கேல் காலின்ஸ், காஸ்கிரேவ், டுக்கன், ஹோகன், லிஞ்ச், மக்ராத், மக்நீல், ஒ ஹிக்கின்ஸ் ஆகியவர்களைக் கொண்டு ஒரு தாற்காலிக அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆர்தர் கிரிபித்