பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதரர் பூசல் 265 இ.யில் ஐரானின் தலைவரா யிருந்ததால், அவரைத் திாற்காலிக அரசாங்கத்தி லும் நியமித்து கிலேமையைக் குேழப்பமடையச் செய்யக் கூடாது என்று அவர்கள் கருதினர். காலின்ஸ் அரசாங்கத்தின் தலைவனுய் நியமிக்கப்பட்டான். எனவே ஆங்கிலேயரிடமிருந்து அர உசாங்க ஸ்தாபனத்தைப் பெறவேண்டிய பொறுப்பு பெரி அதும் அவனேயே சார்ந்து கின்றது. பல நூற்ருண்டு களாய் அயர்லாந்தில் அங்கியர் ஆதிக்கத்தின் அறிகுறி யாய் விளங்கிவந்த டப்ளின் மாளிகையை ஜனவரி 16-ங் தேதி பிரிட்டிஷ் அரசாங்கம் காலின்ஸின் கையில் ஒப் :படைத்தது. இவ்வாறு, அயர்லாந்தின் மேல் பிணிக்கப் பட்டிருந்த பராதீன விலங்கு இரண்டாக முறிந்து விழ்ந்தது அடிமைப்பட்டிருந்த அன்னேக்குச் சேவை செய்துவந்த காலின்ஸ், அவள் விடுதலேயடைந்த பின் அனும், முந்திய ஊக்கத்தில் சிறிதும் தளராது தொண்டு செய்யீ முற்பட்டான். விடுதலைப் போராட்டத்தில் அவன் செய்யாது பாக்கி வைத்திருந்த தியாகம் ஒன்றுதான். அஅவே ஆத்ம பலிதானம். அதையும் முடிப்பதற்குரிய .சந்தர்ப்பம் விரைவில் விளேயக் காண்போம். மூன்றரை வருஷங்களாய்க் காலின்ஸ் தன் சிறிய தோள்களின் மேல் மலைபோன்ற வேலைகள் பலவற்றைத் தாங்கிவந்திருந்தான். ஆனல் முன்னிருந்த நிலைமைக் கும், இப்போதிருந்த கிலேமைக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. முன்னுல் தேசமனேத்தும் அவன் பக்கத்தில் கின்றது ; அங்கிய அரசாங்கம் ஒன்றே அவன் குறியாக இருந்தது. இப்பொழுது அவனுடைய நண்பர்கள் பிளவு பட்டனர்; தோழர்களிலேயே மாறுபட்டவர்களுடன் போராட வேண்டியிருந்தது. அவனுடைய வயது 31 தான்.