பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதரர் பூசல் 267 ஆல்ை சில கிருபர்கள், தங்கள் இஷ்டம்போல் சில கதைகளேக் கற்பித்து, அவை காலின்ஸால் கூறப் பட்டவை என்று பிரசுரித்தனர். இவ்வாறு அார தேச மான அமெரிக்காவில் அவனேப் பற்றி உண்மையும் பொய்யும் விரவிய கதைகள் பல பரவின. ரகசியப் புரட்சிச் சங்கம் அமைப்பதிலும், ஒற்றர் படை அமைப்பதிலும், கைதிகளே விடுவிக்க உபாயங் கள் செய்வதிலும், தேசத்தின் பொருளாதார கிலேமையை ஒழுங்குபடுத்துவதிலும், ஆங்கில ராஜதந்திரிகளோடு சரியாசனத்திலிருந்து ராஜி பேசுவதிலும் காலின்ஸ் தேர்ந்த நிபுணன் என்பதை இதுவரை நாம் கூறியவற். ருல் அறியலாகும். இவற்றுடன் கிற்காது, தேசிய விஷயங்களில் அவன் பெரிய தத்துவ ஞானியாயும் விளங்கிவந்ததைக் காட்ட அவன் எழுதிய கட்டுரைகளி லிருந்து சில குறிப்புக்களைக் கீழே தருகிருேம்: ஆங்கில நாகரிகம், ஆங்கில மக்களுக்கு ஏற்றதா யி ருக்கலாம். நமக்கு அது அங்கியமானதாய்த்தான் இருக்க முடியும். அது அவர்களுடைய சரித்திரத்தின் விளைவாகத் தோன்றிய ஆங்கில நாகரிகமே யன்றி வேறில்லை. அது நமக்குப் பொருந்தாது. அது நாம்: வெளியே போர்த்திக்கொள்ளும் ஓர் உடையே யன்றி, நமக்குள்ளே விளேந்த பொருளன்று. அதை அணிங் திருக்கையில், நாம் அற்பமாயும், ஆபாசமாயும், அகெளரவ மாயும் விளங்கு கிருேம். நம்முடைய குறைகளேயெல்லாம் அது அம்பலப் படுத்துகிறது. நம் நற்குணங்களேக் காட்டுவதற்கு அது சக்தர்ப்பம் அளிப்பதில்லை. ஐரிஷ். மக்களின் கெயிலிக் ஆன்மா இன்னும் ஜிவித்திருக் கிறது. அது தன்னிலே தான் அழிவற்றிருக்கிறது.