பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதரர் பூசல் 271 ஆனல், அதை நாம் மீண்டும் காவிலுைம் மனத்திலுைம் கொள்ளாத வரை, நாம் சுதந்திரர்கள் அல்லர், அழியாத இலக்கியம் எதையும் படைக்கவும் முடியாது." காலின்ஸின் செயல்களுக்கு அடிப்படையாக விளங் கியவை இத்தகைய தத்துவங்களே. அவன் பிரீஸ்டேட் - அமைக்கவேண்டிய வேலையையே அதிகமாய்ச் செய்துவர வேண்டியிருந்ததால், ஐரிஷ் குடியரசுப் படை என்ற பெயருடன் விளங்கிய தொண்டர் படையைக் கவனிக்க முடியவில்லை. அந்த கிர்வாகத்தைப் பாதுகாப்பு மந்திரி யான ஜெனரல் முல்காஹியே கவனித்துவந்தான். பிரிட் டிஷ் படைகள் நாட்டைவிட்டு அகன்று வந்ததால், தொண்டர் படையே அயர்லாந்தில் ஆயுதம் தாங்கிய படையாக விளங்கியது. அப்படையில் சமாதான காலத்தி லேயே சில ஒழுங்கீனங்கள் புகுந்திருந்தன. பின்னல், அரசியல் தலைவர்களுடைய அபிப் பிராய வேற்றுமைகள் படையிலும் பிரதிபலிக்க ஆரம்பித்தன. மேலும், உடன் படிக்கையை ஆதரித்தும் எதிர்த்தும் வாதாடி வந்த டெயில் ஐரான் அங்கத்தினர் பலர் தொண்டர் படை யிலும் பதவிகள் வகித்து வந்ததால், அவர்களுடைய வேற்றுமைகள் அதிலும் புகுந்து விட்டன. தொண்டர் படைத் தலைமை அதிகாரிகளில் ஒருவ னை ரோரி ஒகானர் உடன்படிக்கையை எதிர்த்தவர்களில் முக்கியஸ்தன். அவன் முக்கியமான தொண்டர்க வரிடையே உடன்படிக்கைக்கு விரோதமாகத் தீவிரமாகப் பிரசாரம் செய்துவந்தான். பல தொண்டர்கள் உடன் படிக்கையைத் தகர்த்தெறிய வேண்டும் என்று முன் வநதனா. -- இங்கிலையில் பாதுகாப்பு மந்திரி உடனே தொண்டர் களுடைய வருஷாந்த மகாநாட்டைக் கூட்டவேண்டும் o 1.