பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதார் பூசல் 273 மார்ச் மாதம் 26-ந் தேதி தொண்டர் மகாகாட்டைக் கூட்ட ஏற்பாடுகள் கடந்து வந்தன. இடையில் தொண் டர்களுக்குள்ளே பகைமையும் பூசலும் வளர்ந்து வங் தன. லிமெரிக் நகரில் உடன்படிக்கைக்கு எதிரான தொண்டர்கள் போர் முறையில் இறங்கினர். அந்நகரி அலுள்ள சில விடுதிகளேயும் கட்டிடங்களேயும் அவர்கள் கைப்பற்றினர். அவர்களுக்கும் புதிய சர்க்காரின் படை களுக்கும் போர் மூளும் கிலே ஏற்பட்டது. சில முக்கியஸ் தர்கள் தலையிட்டு உதிரப் பெருக்கைத் தடுத்துவந்தனர். டெயில் ஐரானின் மந்திரி சபை மார்ச் மாதம் 15-க் தேதி கூடி, அங்கிலேயில் தொண்டர்கள் மகாநாட்டை கடத்த அதுமதிக்கக் கூடாது என்று தீர்மானித்தது. அதை எதிர்த்து கின்ற தொண்டர்கள் மார்ச் 18-ம் தேதி மான்ஷன் மாளிகையில் தாங்களாக ஒரு மகாநாட்டைக் கூட்டினர். இதல்ை தொண்டர் படை கிச்சயமான இரு பிரிவாகப் பிரிந்தது. தேசம் முழுதிலும் வருந்தத்தக்க குழப்பம் உண்டா யிற்று. சட்டத்தையும் அமைதியையும் பாதுகாக்கப் படைகளில்லை. ஆங்கிலப் படைகளும் கப்பலேறி விட் டன. எங்கும் அராஜகம் தாண்டவ மாடியது. எங்கும் மாறுபட்ட இரு கட்சியினர் அதிகாரம் செலுத்த ஆரம் பித்தனர். பிரஜைகள் இரண்டு கொள்ளிக்கிடையில் அகப்பட்ட எறும் புபோல் பரிதவித்தனர். எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல், பெல்பாஸ்ட்டில் மதவெறியால் பெரும் போர் ஒன்றும் மூண்டது. அதனல் மிகுந்த உதிரப் பெருக் கும் சேதமும் விளேந்தன. கத்தோலிக்கர் பலர் கொடுர மை-18