பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதரர் பூசல் o 275 சமாதானத்திற்காகச் செய்த முயற்சிகள் பலிக்காமற் பாழாயின. கிரிபித், காலின்ஸ், டிவேலரா முதலியோர் மான்ஷன் மாளிகையில் ஒருமுறை கூடிக் கலந்து பேசி னர். அவர்களுக்குள் எவ்வித முடிவும் ஏற்படக் காணுேம். காலின்ஸ், தான்பிரீன், ஹேல்ஸ் முதலிய தொண் டர் படை முக்கியஸ்தர்கள் சிலர் கூடி ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்தனர். அதுவும் உலேந்து வீழ்ந்தது. முடிவில் எதிர்க் கட்சியைச் சேர்ந்த லியாம் ನಿಟ್ರೆಕ್ಲೆ; எtன் மாய்லன், லியாம் மெல்லோன் ஆகிய மூவரும், சர்க்கார் படை களின் முக்கியஸ்தர்களில் மீன் மக்கியோன் முதலிய மூவ ரைக் கண்டு பேசித் தாற்காலிகமான ஒரு சமாதானம் செய்தனர். இடையில் டெயில் ஐரான் அங்கத்தினரில் இரு கட்சியையும் சேர்ந்த பதின்மர் ஒர் ஒப்பந்தத்திற்கு வழிகாணுமாறு நியமிக்கப்பட்டனர்.