பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழியாச் சுடர் .277 கட்சிக்கு 7-ம், சுயேச்சைவாதிகளுக்கு 7-ம் கிடைத்தன. இவற்ருேடு டிரினிட்டி கலாசாலை அங்கத்தினரின் ஸ்தானங்கள் நான்குக்கும் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். மற்ற கட்சிகளெல்லாம் உபின்படிக்கையை ஆதரிப்பவை யாகையால் டெயில் அங்கத்தினரில் 100-க்கு 72 பேர் உடன்படிக்கையை ஆதரிப்பவர்களா யிருந்தனர். எதிர்க் கட்சித் தொண்டர்கள் பெல்பாஸ்ட் சாமான் களின் பகிஷ்காரத்தை நிறைவேற்றுவதற்காகப் பல இடங்களில் சோதனையிட்டனர். அச்சாமான்களைத் தாங் கிச் சென்ற ரயில்களும் வாகனங்களும் வழிமறித்து நிறுத்தப்பட்டன. அத்தொண்டர்கள் மீண்டும் ஆங்கி லேயருடன் போர் தொடுக்கவேண்டும் என்றும் தீர் மானித்தனர். அவர்களுக்கும் அரசாங்கப் படைகளுக் கும் பல இடங்களில் போர் நடந்தது. காலின்ஸ், இங் நாள்வரை தோழர்களாய் விளங்கியவர்களோடு எப் படிப் போராடுவது என்.அ திகைத்து விட்டுக்கொடுத்து வந்ததால்,மேலும் குழப்பம் அதிகரித்தது. அதல்ை அவன் கடுமையான முறைகளேக் கையாண்டு தேச மக்களைப் பாதுகாக்க முனேந்தான். போர் கோர்ட்ஸ் ' என்னும் இடத்தில் படை வீடு கள் எதிர்க் கட்சித் தொண்டர்கள் வசம் இருந்தன. சர்க்கார் படைகள் அவற்றைக் காலி செய்யும்படி எச் சரிக்கை செய்ததில், அவர்கள் இணங்காததால், இரு கட்சியாருக்கும் சண்டை நிகழ்ந்தது. முடிவில் சர்க்கார் படைகள் அப் படைவீடுகளேப் பிடித்துக்கொண்டன இதைப் போலவே வேறு பல படைவீடுகளும் கட்டி டங்களும் பிடிக்கப்பட்டன.