பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 - மைக்கேல் காலின்ஸ் -ഇ*ബ கிரிஷாம் விடுதியை சர்ககார் படை கைப்பற்ற முயற்சிக்கையில் கதால் புருகா சில தொண்டர்களுடன் அங்கிருந்தான். அவன் எதிரிகளுக்குப் பணிய மறுத் துத் தீவிரமாய்ப் போராட முன்வந்தான். திப்போல் வெகுண்டெழுந்த அவன் உள்ளத்திற்குப் பணிவது மானக்கேடாகத் தோன்றியது. கொடிய குண்டுகள் அவன்மேல் பாய்ந்து காயம் விளேத்தன. கடைசியாக அவ்விரன் உடம்பெல்லாம் புண்ணுகி வீழ்ந்தான். இரண்டு தினங்களுக்குப்பின் அவன் மண்ணுலக வாழ்க் கையை நீத்தான். ஐரிஷ் உள்நாட்டுக் கலகத்தில் நேர்ந்த மகா துக்ககரமான சம்பவங்கள் பலவற்றில் புருகாவின் மரணமும் ஒன்று. கடைசிவரை அவன் செய்துவந்த விரப் போராட்டம் பகைவரும் வியந்து போற்றத்தக்கதா யிருந்தது. o காலின்ஸ் அக்காலத்தில் தன் அரசியல் வேலைகளே ஒதுக்கிவைத்துவிட்டு, மிக முக்கியமாக ராணுவத்தையே கவனித்து வந்ததோடு, சேபைதிப் பதவியையும் மேம் கொண்டான். அவன் அப்பதவியை வகித்த ஆறு வார காலத்தில், எதிர்க்கட்சித் தொண்டர்கள் வசமிருந்து ஒவ்வொரு நகரமாய் சர்க்கார் படைகளால் பிடிக்கப் பட்டது. இரு கட்சிப் படைகளுக்கும். கடந்த போராட்டங் களே யெல்லாம் இங்கு விவரித்தல் அசாத்தியம். லிமெரிக், டண்டாக், கார்க் முதலிய முக்கிய நகரங்களில் எதுவும் போராட்டத்தில் தப்பவில்லை. இரு பக்கத்திலும் தொண்டர் திலகங்களான தீரர் பலர் உயிர் துறந்தனர். எங்கணும் ஐரிஷ் வ்ாலிபர்கள் தங்கள் சகோதரர்களேயே சுட்டுத் தள்ளும் செய்திகள் பரவிகின்றன. அயர் லாந்தின் மண்மீதே ஐரிஷ் மக்களின் உதிரம் பெருக்கப் பட்டது.