பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 மைக்கேல் காவின்ஸ் பட்ட மெழுகுபோல் உருகும் சிந்தையராகிய பல்லாயிரம் மக்கள் பிரேதத்தைத் தொடர்ந்து சென்று மரியாதை செய்தனர். மைக்கேல் காலின்ஸ் சேனபதி உடை அணிந்து ஊர்வலத்தின் முன்னணியில் சென்ருன். பொதுஜனங்கள் கண்முன்பு அவன் தோன்றியது அதுவே முதல் முறையாகும். கம்பீரத் தோற்றமும்: அழகிய வதனமும் கொண்டு விளங்கிய காலின்ஸைக் கண்ணுற்ற மக்கள், அவ்விரக் காளே எப்படியும் தேசத்தைப் புனருத்தாரணம் செய்வான் என்று உறுதி யாக நம்பினர். o கிரிபித்தின் கல்லறையின் அருகே காஸ்கிரேவ் உருக்க மான ஒரு சொற்பொழிவாற்றினர். பின்னர் பிரேதம் அடக்கம் செய்யப்பட்டது. பிரேதப் பெட்டியின் மேல் மண் கொட்டி மூடுவதற்கு முன்னல், காலின்ஸ் அதைக் கடைசி முறையாக உற்று நோக்கினன். தன் ஆருயிர்த் தலைவரின் உடலைக் கடைசியாய்த் தரிசித்து கின்ற அந்த இளஞ் சிங்கமும் ஒரு வாரத்திற்குப் பின்னல் விர சுவர்க்கம் அடையப் போகிறது என்று ஜனங்களில் எவர்தான் எண்ணியிருக்கக்கூடும் ? கிரிபித்தின் பிரேத ஊர்வலத்தில், கலந்துகொண்ட நகர மக்கள், வெகு சிக்கி ரத்தில் காலின்ஸின் பிரேத ஊர்வலமே நடக்கும் என்பதை எப்படி அறிந்திருக்க முடியும் ? ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி காலை காலின்ஸ் லிமெ ரிக்கிலுள்ள படைவீடுகளேப் பார்வையிடுவதற்காக டப் வினிலிருந்து புறப்பட்டான். அவனுக்குப் பாதுகாப் பாளராக ளின் ஒகானலின் தலைமையின் கீழ்ப் பதினன்கு சிப்பாய்கள் கவசம் பூண்ட கார் ஒன்றில் பின் தொடர்ந்து சென்றனர். உடல் நலமின்மையால் காலின்ஸ் உற்சாக