பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழியாச் சுடர் 283. மாய் நடமாடுவதாயும், அவன் அழைத்துச் செல்லும் உதவிப் படை சிறிதாயிருப்பதாயும் எச்சரிக்கை செய் தான். காலின்ஸ் சிரித்துக்கொண்டு, நீங்கள் செல்லக் கூடிய இடத்தில் காங்களும் செல்லலாம் ! என்று கூறிச் சென்ருன். பாண்டன் நகரைக் காலின்ஸ் கடந்து செல்லும் பொழுது இரவு ஏழு மணிக்கு மேலாயிற்று. கதிரவன் ஒளி மறைந்தது. காலின்ஸ் பக்கத்திலிருந்த டால்டனிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, என் சொந்தத் தாலுகா வில் வைத்தே என்னேத் தாக்குவார்கள் என்று நான் நம்பவில்லே ' என்று வேடிக்கையாகக் கூறினன். யந்தி ரத் துப்பாக்கிகளேயுடைய காரிலிருந்து 50-கஜத்துக்கு முன்ல்ை மோட்டார் சைக்கிளும், அதே தூரத்துக்குப் பின்னல் காலின்ஸின் காரும் சென்றுகொண்டிருந்தன. கவசம் பூண்ட காரும் தொடர்ந்து சென்றது. வழியில் இரு பக்கத்திலும் குன்றுகள் அடர்ந்திருந்தன. இடை யில் ஒர் ஒடை காணப்பட்டது. அதற்கு அடுத்தாற் போல் செங்குத்தான குன்றம் ஒன்று இருந்தது. அக்குன்றின் அருகே காலின்ஸின் கார் ஒரு ரஸ்தா வில் திரும்பும்பொழுது, திடீரென்று அவனுக்கு முன் ல்ை சென்றுகொண்டிருந்த காரிலிருந்து யந்திரத் துப் பாக்கிகள் குண்டுகளே உமிழ்ந்தன. ரஸ்தாவில் குண்டு களின் ஒசை செவியைத் துளேத்தது. ஜெனரல் டால் டன் டிரைவரைப் பார்த்து, காரை வேகமாய் ஒட்டு ' என்று உத்தரவிட்டார். ஆனல் காலின்ஸ், காரை கிறுத்தி வெளியேறுங்கள் ! நாம் அவர்களோடு போராடு வோம் ! என்று கூறி வெளியே குதித்தான். மற்றவர் களும் கீழே இறங்கினர். அவர்க்ள் யாவரும் அருகே