பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போர்க் கோலம்

27

பூரண சுதந்திரத்தையே வேண்டி நின்றார்கள். அவர்களில் ஒருவகிைய டாம் கிளார்க் பதினாறு வருடம் சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவந்தவன். இளமைப் பருவத்தை யெல்லாம் வெய்ய சிறையிடையே கழித்த அவ்வாலிபனின் கொள்கையை ஆதரிக்கும் இதர இளைஞர்களும் ஒன்றுகூடி 'ஐரிஷ் சுதந்திரம்' என்ற மாதப் பத்திரிகையை ஆரம்பித்தனர். அப்பத்திரிகை, 'பிரிவு, பிரிவு ! இங்கிலாந்தினிட்மிருந்து பிரிவு ! ஏகாதிபத்தியத்திலிருந்து வெளிப்படல் !’ என்ற கொள்கையை எங்கும் பரப்பிவந்தது. அந்தப் பத்திரிகையின் ஆதிக்கம் யார் கையில் இருக்க வேண்டும் என்பதைப் பற்றித் தொண்டர்களுக்குள் பூசல் ஏற்பட்டதால், தீவிரவாதிகள் சங்கத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் வேறு பல கட்சிகளையும் கலந்து கொண்டு ஐரிஷ் தொண்டர் படையை அமைத்தனர். தேர்ந்த நிபுணர்கள் அவர்களுக்குப் போர்ப் பயிற்சி கொடுத்துவந்தனர். அக்காலத்தில் ஐரிஷ் பொதுஜனங்கள், புரட்சியிலும் போரிலும் கம்பிக்கையற்று, அமைதியான முறையிலே ஆங்கில ராஜதந்திரிகள் கொடுத்ததே. போதும் என்று அடங்கிக் கிடந்தார்கள். முன் அடைந்த தோல்விகளால் அவர்கள் மனம் முறிந்திருந்தனர். ஆதலால் தொண்டர்கள், 'காலம் மாறும்; அப்போது யாவரும் கூடக் காண்போம் !' என்று, நம்பிக்கையை இழக்காமல் பணியாற்றிவந்தனர்.

அயர்லாந்துக்குச் சுயாட்சி கொடுப்பதே தங்கள் நோக்கம் என்று பறைசாற்றி வந்த ஆங்கிலத் தாராளக் கட்சியார், ஆதிக்கத்திற்கு வந்தவுடன், பழைய வாக்குறுதிகளை மறந்தனர். ஆங்கில ஆதிக்கத்தை ஆதரிக்கும் ஐரிஷ் அரசியல்வாதிகளுக்கு அவர்கள் பட்டங்களும் பதவிகளும் கொடுத்து மழுப்பிவந்தனர்... அவர்களிடம்