பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போர்க் கோலம்

33

அமெரிக்க ஐக்கிய மாகாணம் அக் காலத்தில் யுத்தத்தில் கலந்துகொள்ளாமையாலும், சுதந்திர வெறி கொண்ட ஐரிஷ்காரர் பலர் அங்கு இருந்தமையாலும், தொண்டர்களுக்குப் பல சௌகரியங்கள் கிடைத்தன. அங்கிருந்த ஐரிஷ் சங்கத்தின் மூலம் அவர்கள் ஜெர்மனியுடன் கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டனர். ஜெர்மானிய ஸ்தானீகரும் அதற்கு உதவி புரிந்தார். அதே சமயத்தில் ஸர் ரோஜர் கேஸ்மென்டு என்னும் தேசபக்தர், ஆங்கிலேயரின் கையில் அகப்படாமல் ஜெர்மனிக்குத் தப்பிச் சென்று, அங்கு ஆங்கிலப் பட்டாளத்திலிருந்து ஜெர்மானியரால் கைதி செய்யப்பட்ட ஐரிஷ் யுத்தக் கைதிகளைப் புரட்சிப் படையில் சேருமாறு தூண்டிவந்தார்.

தொண்டர் படையின் விரோதிகள், பூரண சுதக்திரம் வேண்டுவோர் ஜெர்மனியுடன் . சதியாலோசனை செய்வதாயும், ஜெர்மன் பணத்தை லஞ்சமாகப் பெற்று வேலை செய்வதாயும் கூக்குரல் கிளப்பினார்கள். பத்திரிகைகளும் அவர்களைப் பழித்தன. அந்நிலையில் உண்மையான விஷயங்களை வெளியிட்டுப் பொதுஜன அபிப்பிராயத்தை ஒழுங்குபடுத்தவேண்டியது அவசியமாயிற்று. கிரிபித், நூற்றைம்பது பவுனை மூலதனமாகக் கொண்டு, ஒரு சிறு தினசரிப் பத்திரிகையை ஆரம்பித்தார். வெகு சீக்கிரத்தில் அரசாங்கம் அதையும், 'ஐரிஷ் சுதந்திரம்', 'ஸின்பீன்' போன்ற பத்திரிகைகளையும் நசுக்கி விட்டது. கிரிபித் ஊக்கம் தளராது 'கத்தரியும் பசையும்' என்ற பத்திரிகையைத் தொடங்கி, வாரம் இருமுறை வெளியிட்டுவந்தார். வேறு பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளைக் கத்தரித்து ஒன்றுசேர்த்து ஒட்டி, அதைப்-

மை—3