பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போர்க் கோலம்

35

பிரசங்கங்கள் செய்யப்பட்டன. ஒருவர், 'மரணத்திலிருந்து வாழ்வு தளிர்க்கின்றது ; தேசாபிமானிகளாகிய ஆடவர் பெண்களுடைய கல்லறைகளிலிருந்து ஜீவசக்தி பெற்றுள்ள சமூகங்கள் தோன்றுகின்றன......... இத்தகைய கல்லறைகளைக் கொண்டிருக்கும்வரை சுதந்திரமில்லாமல் அயர்லாந்து சமாதானமாக இருக்கப் போவதில்லை !' என்று பிரசங்கித்தார்.

தேசத்தில் நடந்த காரியங்களையும் யுத்தத்தால் நேர்ந்த குழப்பத்தையும் லண்டனில் இருந்த காலின்ஸ் உணராமலில்லை. அவன் தன் நண்பர்கள் பலரைத் தொண்டர்படையில் சேர்த்து யுத்தப் பயிற்சி கொடுத்து வந்தான். லண்டனிலிருந்த தொண்டர் கூட்டத்தைப் போல் ஐரிஷ் சுதந்திரத்திற்காக அந்தரங்க விசுவாசத்துடன் உழைத்த குழாத்தைக் காண்பதரிது. அக்கூட்டத்திற்குத் தாய்நாட்டில் வெகு சீக்கிரத்தில் ஏற்படவிருந்த போராட்டத்தைப்பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால், ஏதோ ஒர் பெருங் காரியம் நடைபெறப் போவதாக மட்டும் தெரியும். அக்காலத்தில் இங்கிலாக்தில் சகல வாலிபர்களையும் கட்டாயமாய் ராணுவத்தில் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஐரிஷ் தொண்டர்கள், தாய்நாடு சென்று, கட்டாய ராணுவச் சட்டம் அங்கு அமலுக்கு வராத முறையில், தங்கள். நண்பர்களுடன் தோளோடு தோள் சேர்த்து நின்று போராடவேண்டும் என்று தீர்மானித்தார்கள்.

காலின்ஸ், தன்னுடைய விசேஷ வல்லமைக்கு ஏற்றதாக இங்கிலாந்திலும் அயர்லாந்திலும் ஒரு தொழில் கிடைக்காது என்று எண்ணி, அமெரிக்க ஐக்கிய மாகாணத்திற்குச் செல்லலாம் என்று முன்னர் நினைத்திருந்தான். இங்கிலாந்திலிருந்தால், கட்டாய ராணுவச்