பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

மைக்கேல் காலின்ஸ்

சட்டக் கொடுமை ! ஐக்கிய மாகாணத்திற்குச் சென்றால், வாழ்வு முழுவதையும் சூதாட்டமாகக் கருதி, ஆயிரம் ஆயிரமாகப் பொருள் சேர்க்கலாம் ! ஆனால் தாய்நாட்டிற்குப் பெரியதோர் அபாயம் ஏற்படப்போகின்ற வேளையிலே, கருமேகங்கள் இடியும் மின்னலும் கொண்டு வானத்தில் காணப்படும் பொழுது, அவன் அன்னையின் மறக்கத் மறக்கத் துணியவில்லை. பிறந்த நாட்டில் போர்ப் பறை ஒலித்தது. அன்னம் ஊட்டி வளர்த்த அன்னையின் மணிக் கை ஆணை காட்டி அழைத்தது ! தொண்டர் படையிலிருந்து ஆணையும் பிறந்தது ! இளைஞன் காலின்ஸ் துடித்துக்கொண்டு நின்றான். ஆனால் கம்பெனித் தொழிலை எப்படி விடுவது 'ஐரிஷ் படையில் சேரச் செல்கிறேன் ; விடை கொடுக்க வேண்டும்' என்று காரியஸ்தரை வேண்டினான். ஐரிஷ் படை என்பது அயர்லாந்தின் சுதந்திரப் படையா, அன்றி அரசாங்கப் படையா ? காரியஸ்தர் அரசாங்கப் படை என்றே கருதிக் கொண்டார். அவர், மிகுந்த களிப்படைந்து, காலின்ஸைப் பாராட்டி, கூட ஒரு மாதச் சம்பளமும் கொடுத்து . அனுப்பிவிட்டார். காலின்ஸ் அந்தப் பணத்தைப் போர் நிதிக்குச் சேர்த்துக்கொண்டான். இங்கிலாந்தில் மேற்கொண்டு அவனுக்கு வேலையில்லை. அவன், போர்க் கோலம் பூண்டு, 1916-ம் ௵, ஜனவரி௴ மத்தியில் தாய்நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றான்.