பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈஸ்ட்டர் கலகம்

39


தொழிலாளர் இயக்கத்தின் தலைவனாயிருந்த ஜேம்ஸ் கன்னோல்லி அப்படிக் கவலைப்பட்டவர்களில் ஒருவன். ஆனால், அரிய சந்தர்ப்பம் வாய்க்கும் பொழுது அதைக் கைநழுவ விடக்கூடாது என்று அவன் கருதினான். வெற்றி தோல்வி ஒருபுறமிருக்க, ஆட்சிமுறையின் கொடுமையை ஆயுதந் தாங்கி ஆட்சேபித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது அவன் நோக்கம். தொண்டர்களுடைய கருத்தும் அவனுடையதற்கு மாறுபட்டதன்று. இவர்கள் பலரும் கூடிக் கலந்தபின், எழுச்சிக்கு வேண்டிய தேதி குறிப்பிடப்பட்டது. ஆயுதங்கள் வேண்டி ஜெர்மனிக்கு வேண்டுகோள் அனுப்பப்பட்டது. அதன்படி ஜெர்மனியும் எழுச்சி ஏற்படும் தினத்தில் கப்பலில் ஆயுதங்களை அனுப்ப இசைந்தது. இவ்விஷயங்களைப்பற்றித் தொண்டர்களிலேயே அகேகருக்கு முழு விவரமும் தெரியாது. அந்நிலையில் அதிகாரிகள் எங்ஙனம் அறியக்கூடும் அவர்கள் ஆயுதங்கள் இல்லாமையால் புரட்சி யொன்றும் தோன்றாது என்ற திடநம்பிக்கையுடன் பேசாதிருந்தனர்.

எழுச்சிக்குக் குறிக்கப்பட்ட தினம் ஏப்பரல் மீ 28௳ ஞாயிற்றுக்கிழமை. தொண்டர் படையின் தலைமைக் காரியாலயத்தார் அன்று தினம் தேசம் முழுதும் தொண்டர்கள் அணிவகுத்துச் சென்று சாதுரியமான விரச் செயல்கள் புரியவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டனர். அந்த 25௳ ஈஸ்ட்டர் விழாவாகும். ஈஸ்ட்டர் திருநாள் கிறிஸ்துபெருமான் கல்லறையிலிருந்து உயிர்த்து எழுந்ததன் ஞாபகார்த்தமாகக் கொண்டாடப்படுவது. அயர்லாந்து உயிர்த்து எழுவதற்கும் அதே தினம் குறிக்கப்பட்டது டப்ளின் நகரில் மட்டும் 3,000 தொண்டர்கள் இருந்தனர். தேசம் முழுதிலும் 18,000