பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மைக்கேல் காலின்ஸ்

44


வருஷங்களுக்கிடையில் அவர்கள் ஆறு முறை தங்கள் உரிமையை ஆயுத பலத்தினுல் நிலைநிறுத்தியிருக்கிருர்கள். அந்த ஜீவாதார உரிமையை அடிப்படையாகக் கொண்டு, அதை உலகத்தின் முன்னிலையில் உறுதி செய்து, ஐரிஷ் குடியரசை ஒரு தனிப்பட்ட சுதந்திரமுள்ள ராஜாங்கமாக நாங்கள் இதன்மூலம் பிரகடனம் செய் கிருேம். அதன் சுதந்திரத்திற்காகவும், நன்மைக்காகவும், அது மற்ற நாட்டாரின் நடுவே புகழடையவும், நாங்கள் எங்கள் உயிர்களையும், எங்களுடன் ஆயுதம் தாங்கி நிற்கும் தோழர்களுடைய உயிர்களையும் பிணையாக வைக்கின்ருேம். ஐரிஷ் குடியரசு ஒவ்வோர் ஐரிஷ்காரனுடைய விசு வாசத்தையும் பெறுவதற்கு உரிமையுடையதாதலால் அதை வேண்டுகின்றது. குடியரசு மத சுதந்திரத்தையும், பிரஜா சுதந்திரத்தையும், எல்லா மக்களுக்கும் வேண்டிய சம உரிமைகளையும் சந்தர்ப்பங்களையும் கொடுத்துப் பாது காப்பதாக உறுதி கூறுகின்றது. அந்நிய அரசாங்கம் முற் காலத்தில் பெரும்பான்மையோரிடத்திலிருந்து சிறுபான் மையோரைப் பிரித்துவைத்துக் கவனமாய் வளர்த்து வந்த வேற்றுமைகளை மறந்து, தேசத்தின் சகல மக்களையும் ஒன்ருகக் கருதி, அவர்களின் சந்தோஷத்தையும் செழிப் பையும் பெருக்குவதாகக் குடியரசு உறுதி கூறுகின்றது. நம்முடைய ஆயுத பலத்தினுல் ஐரிஷ் மகாஜனங்களின் பிரதிநிதித்துவமுள்ள ஆடவர் பெண்டிர் யாவருடைய வாக்கினுலும் தேர்ந்தெடுக்கப்படும் நிலையான தேசீய அர சாங்கம் ஏற்படும்வரை, இந்தத் தாற்காலிக அரசாங்கமே குடியரசின் லிவில் நிர்வாகத்தையும் ராணுவ நிர்வாகத்தை யும் ஜனங்களின் சார்பாக நடத்திவரும்...... 7 தாமஸ் ஜே. கிளார்க் nன் மாக் டயர்முடா தாமஸ் மாக்டொனக்